கர்பி ஆங்கலாங்கு மாவட்டம்
கர்பி ஆங்கலாங்கு மாவட்டம் அசாமில் உள்ளது. இதன் தலைமையகத்தை திபு நகரில் நிறுவியுள்ளனர். இது 10434 சதுர கிலோமீட்டர் பரப்பளவைக் கொண்டது.[1] 2016-இல் இம்மவாட்டத்தின் பகுதிகளைக் கொன்டு கிழக்கு கர்பி அங்லோங் மாவட்டம் மற்றும் மேற்கு கர்பி அங்லோங் மாவட்டம் என இரண்டு புதிய மாவட்டங்கள் நிறுவப்பட்டது. பொருளாதாரம்இது வளர்ச்சியில் பின்தங்கியுள்ள மாவட்டங்களில் ஒன்று. மத்திய அரசு வழங்கும் வளர்ச்சி நிதியைப் பெறுகிறது.[2] ஆட்சிப் பிரிவுகள்இந்த மாவட்டத்தை மூன்று வட்டங்களாகப் பிரித்துள்ளனர். அவை: திபு, ஹம்ரேன் போகஜான் மக்கள் தொகை2011-ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்போது, 965,280 மக்கள் வசித்தனர்.[3] சதுர கிலோமீட்டருக்குள் 93 பேர் என்ற அளவில் மக்கள் அடர்த்தி இருக்கிறது.[3] பால் விகிதம், ஆயிரம் ஆண்களுக்கு 951 பெண்கள் என்ற அளவில் உள்ளது.[3] இங்கு வசிப்போரில் 69.25% பேர் கல்வியறிவு பெற்றுள்ளனர்.[3] இங்கு பழங்குடியின மக்களும் வசிக்கின்றனர். மொழிகள்மக்கள் கர்பி மொழியைப் பேசுகின்றனர். சிலர் திமாசா, ரெங்மா, குக்கி ஆகிய மொழிகளையும் பேசுகின்றனர். சான்றுகள்
இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia