நச்சுப் பாம்புகள் என்பவை பாம்பின் ஒரு வகையாகும். இவை நச்சினை உற்பத்தி செய்யும் திறன் கொண்டவை. இது தனது நச்சுப்பற்களால் இரைவிலங்கினுள் நச்சினை செலுத்தி அதன் நகர்வை தடைசெய்து கொன்று இரையாக்கிக்கொள்கிறது. மேலும் எதிரி விலங்குகளிடமிருந்து தன்னை தற்காத்துக்கொள்ளவும் நச்சுப்பல்லினை பயன்படுத்துகிறது. பெரும்பாலான நச்சுப் பாம்புகள் எலப்பிடெ, வைபிரிடெ, அட்ராக்டாசுப்பிடெ குடும்ப வகையினதாகவும் சில நச்சுப்பாம்புகள் மட்டும் கொலுபிரிடெ குடும்பத்தைச் சார்ந்ததாகவும் உள்ளன. மனிதர்களுக்கு மரணத்தை ஏற்படுத்தக் கூடிய இவ்வகைப் பாம்புகளின் நச்சின் மரண வீரியக் குறியீடு எல்டி50.
எல்டி50 அடிப்படையில் ஆஸ்திரேலியாவில் காணப்படும் உலகின் மிக வீரிய நச்சுப்பாம்பு, inland taipan
பரிணாம வளர்ச்சி
நச்சுப் பாம்புகளின் பரிணாம வரலாறு இரண்டரை கோடி (25 மில்லியன்) ஆண்டுகளுக்கு முன்பிருந்து தொடங்குகிறது.[1] பாம்பு நச்சு என்பது மாற்றமடைந்த உமிழ்நீராகும். இந்த நச்சு இரையைக் கொன்று அதன் இயக்கத்தை தடை செய்யவும் எதிரிகளிடமிருந்து தற்காத்து கொள்ளவும் உயர் சிறப்படைந்த உள்ளீடற்ற பல்லின் வழியே இலக்கு விலங்கின் தோல், தசைகளை துளைத்துக்கொண்டு இரத்த நாளத்திற்குள் பீச்சுகிறது.
வகைப்பாடு
நச்சுப் பாம்புகளுக்கென தனித்த அல்லது சிறப்பு வகைப்பாடு இல்லை. இவ்வினங்கள் பல குடும்பங்களிலும் பரவலாக காணப்படுகிறது.
இது பரிணாம வளர்ச்சியின் விளைவாகும்.