நடுநாடுநடுநாடு என்பது சோழநாட்டுக்கும் தொண்டைநாட்டுக்கும் இடைப்பட்ட நிலப்பகுதியாகும். பத்தாம் நூற்றாண்டில் தோன்றிய இடைக்காலச் சோழர் ஆட்சியின்போது ஆட்சி அமைப்பில் வளநாடு, நாடு, கூற்றம், என்னும் நாட்டுப் பிரிவுகள் தோன்றின. அப்போது சோழநாட்டுக்கும், தொண்டைநாட்டுக்கும் இடைப்பட்டுக் கிடந்த நிலப்பகுதியை நடுநாடு எனப் பெயரிட்டு வழங்கினர். தேவாரத் திருத்தலங்களும், திவ்விய தேசங்களும் நடுநாட்டிலுள்ள கோயில்கள் எனச் சில கோயில்களைப் பகுத்துக் காட்டுகின்றன. இந்த நடுநாட்டை மகதம் எனவும் வழங்குவர். மகதை என்பது தமிழ்நாட்டிலுள்ள மகதம். இதனை நடுநாடு என்றும் கூறுவர். சங்ககாலத்தில் இது அருவாளர் வாழ்ந்த அருவாள் நாடு, ஓய்மான் நல்லியாதன் முதலானோர் ஆண்ட ஓய்மானாடு ஆகிய பெயர்களுடன் விளங்கியது. வடநாட்டிலுள்ள மகதம் தமிழ் அல்லாத மொழி பேசப்படும் 17 நிலங்களில் ஒன்று. நடுநாடு பெயர்க்காரணம்நடுநாடு என்னும் பெயர் ஏற்பட்டதற்குப் பல காரணங்கள் கூறப்படுகின்றன. அவையாவன:
கருவிநூல்
அடிக்குறிப்பு |
Portal di Ensiklopedia Dunia