நட்ட நடு மார்ச்சு![]() நட்ட நடு மார்ச்சு (Ides of March, ஐடெஸ் ஆஃப் மார்ச் , இலத்தீன்: Idus Martii) என்று உரோமானிய நாட்காட்டியில் மார்ச் 15ஆம் நாள் அழைக்கப்படுகிறது. இலத்தீனில் "ஐடஸ்" என்பது குறிப்பாக மாதங்களின் தொடர்பில் "வகுத்தலில் பாதி" என்று பொருள்படும். உரோமானிய நாட்காட்டியில் மாதங்களின் நடுப்பகுதியைக் குறிக்க இச்சொல் பயன்படுத்தப்பட்டது. மார்ச், மே, சூலை, அக்டோபர் மாதங்களின் 15ஆம் நாளும் பிற மாதங்களின் 13ஆம் நாளும் இச்சொல் ஒட்டுடன் குறிக்கப்பட்டன.[1] நட்ட நடு மார்ச்சு நாள் கிரேக்கப் போர்க் கடவுள் மார்சிற்காக கொண்டாடப்படுகிறது. அன்றைய நாளில் படை அணிவகுப்புகள் நடத்தப்படும். தற்காலத்தில் இச்சொற்றொடர் ஐடெஸ் ஆஃப் மார்ச் கி.மு 44ஆம் ஆண்டில் யூலியசு சீசர் கொல்லப்பட்ட நாளாக அறியப்படுகிறது. உரோமன் செனட்டில் சதிகாரர்கள் சீசரை 23 முறை குத்திக் கொன்றனர்.[2] இந்த வரலாற்றின்படி, வருமுன் உரைப்போரொருவர் சீசர் நட்ட நடு மார்ச்சுக்கு முன்னர் கொலை செய்யப்படுவார் என்று கட்டியம் கூறியதாகவும் இதனில் நம்பிக்கை இல்லாத சீசர் அன்றைய நாளின் துவக்கத்தில் மார்ச்சின் நடுநாள் வந்ததே என்று எள்ளியபோது அவர் ஆனால் நாள் முடியவில்லை என்று கூறியதாகவும் விவரிக்கிறது.[2] இந்த நிகழ்வை வில்லியம் சேக்சுபியர் தமது நாடகம் யூலியசு சீசரில் ஐடெஸ் ஆஃப் மார்ச் குறித்து விழிப்புடன் இருக்கச் சொல்வதாக அமைத்துள்ளார்.[3][4] மேற்கோள்கள்
வெளியிணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia