நதால், பிரேசில்
நத்தால் (Natal, பிரேசிலிய போர்த்துக்கீசம்: [naˈtaw], நத்தாவ்[1] கிறித்துமசு) பிரேசிலின் வடகிழக்கு மாநிலமான இரியோ கிராண்டெ டொ நோர்தெயின் தலைநகரமும் மிகப் பெரிய நகரமும் ஆகும். பிரேசிலிய புவியியல் மற்றும் புள்ளிவிவர நிறுவனத்தின் சூலை 2009 அறிக்கையின்படி இங்கு 950, 820 (பெருநகரப் பகுதியில் 1,363,547) மக்கள் வாழ்கின்றனர். பிரேசிலிய பொருளியல் ஆய்வுக் கழகத்தால் இது நாட்டின் மிகவும் பாதுகாப்பான தலைநகர நகரமாகக் கருதப்படுகிறது.[2][3] 1980களில் கட்டமைக்கப்பட்ட வயா கோசுடீரா என்ற கடலோர நெடுஞ்சாலையும், 10 கி.மீ. தொலைவுள்ள கடலோர நிழற்சாலைகளும் மணற்குன்றுகளும் இதனை ஓர் சுற்றுலாத்தலமாக்கி உள்ளன. இங்கு சுற்றுலாப் பயணிகளை ஈர்க்குமாறு பல இடங்கள் உள்ளன; இயற்கை அழகு ததும்பும் மரக்காஜோவின் தூய நீரும், உலகின் பெரும் முந்திரித் தோட்டங்களும், ரியெசு மார்கோசு கோட்டை, ஆல்பெர்ட்டோ மரனோ அரங்கம், நியூட்டன் நவர்ரோ பாலம் போன்ற வரலாற்றுச் சிறப்பு மிக்க கட்டிடங்களும் நினைவுச்சின்னங்களும் (பொண்டா நெக்ரா, பிப்பா கடற்கரை, ஜெனிபாப்பு போன்ற) அழகான கடற்கரைகளும் புகழ்பெற்ற சுற்றுலாவிடங்களாக அமைந்துள்ளன. இங்கு நடைபெறும் தெருத்திருவிழாவான கார்நத்தால் பரவலாக அறியப்பட்டதாகும். இங்கு பிரேசிலின் இரண்டாவது பெரிய பூங்காவான பார்க்கு தாசு துனாசு உள்ளது. இந்த நகரம் ஆபிரிக்காவிற்கும் ஐரோப்பாவிற்கும் அண்மையில் அமைந்துள்ள தலைநகர நகரமாக உள்ளது.[4] இங்குள்ள அகத்தோ செவெரோ பன்னாட்டு வானூர்தி நிலையம் நத்தாலை பிரேசிலின் பிற நகரங்களுடன் இணைப்பதுடன் பன்னாட்டு சேவைகளையும் இயக்குகிறது. 2014 உலகக்கோப்பை காற்பந்து நடைபெறும் நகரங்களில் ஒன்றாக நத்தால் தெரிந்தெடுக்கப்பட்டுள்ளது.[5] மேற்சான்றுகள்
|
Portal di Ensiklopedia Dunia