நந்தமூரி பாலகிருஷ்ணா
நந்தமூரி பாலகிருஷ்ணா அல்லது பாலையா ஆந்திர சட்டமன்ற உறுப்பினரும், இந்தியத் திரைப்பட நடிகருமாவார். இவர் ஆந்திராவில் முதலமைச்சராக இருந்த என். டி. ராமராவ் அவர்களின் ஆறாவது மகனாவார். குழந்தை நட்சத்திரமாக தாத்தம்மா கலா திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்.[1][2] தொடக்கால வாழ்க்கை மற்றும் குடும்பம்பாலகிருஷ்ணா நடிகரும் ஆந்திர முதல்வருமான என். டி. ராமராவ் - பசவ தரகம் தம்பதியினருக்கு மகனாக சென்னை(அப்போது மதராஸ்) பிறந்தார்.[3][4] அப்போது தெலுங்கு திரையுலகமும் சென்னையிலேயே இயங்கிவந்தது. அதனால் பாலகிருஷ்ணாவின் குழந்தைப்பருவம் சென்னையிலேயே கழிந்தது. அதன் பின் ஆந்திரா,தமிழ்நாடு,கேரளா பிரிவினையின் போது பாலகிருஷ்ணாவின் குடும்பம் ஆந்திராவுக்கு குடிபெயர்ந்தது. இளங்கலை வணிகவியல் படிப்பை ஐதராபாத்தில் உள்ள நிசாம் கல்லூரியில் பாலகிருஷ்ணா முடித்தார்.[5] 1982ல் வசுந்திரா தேவியை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு இரு பெண் குழந்தைகளும், ஒரு ஆண் குழந்தைகளும் உள்ளனர் . ஆதாரங்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia