சிரஞ்சீவி (நடிகர்)
கொன்னிதெல சிரஞ்சீவி (தெலுங்கு: చిరంజీవి)) (பிறப்பு:1955 ஆகஸ்ட்டு 22) கொன்னிதெல சிவ சங்கரா வர பிரசாத் [1] என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் தெலுங்கு திரைப்பட நடிகர் மற்றும் அரசியல்வாதி ஆவார். 2006 ஆம் ஆண்டு இந்திய அரசால் வழங்கப்படும் இரண்டாம் நிலை விருதான பத்ம பூஷண் விருதைப் பெற்றார். 7 முறை பிலிம்பேர் விருதைப் பெற்ற ஒரே தெலுங்குத் திரைப்பட நடிகர் ஆவார்.[சான்று தேவை] இவர் ஆகத்து 10, 2008 ஆம் ஆண்டு அரசியல் கட்சி அலுவலகத்தை தொடங்கியுள்ளார். பின்னர் ஆகத்து 17, 2008 அன்று இக்கட்சியின் பெயர் பிரஜா ராஜ்யம் கட்சி என்று அறிவித்துள்ளார்.[2] 2009ம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில் பலேகொல், திருப்பதி ஆகிய இரு தொகுதிகளில் போட்டியிட்டதில் திருப்பதியில் மட்டும் வெற்றிபெற்றார்.[3] ஆகத்து 20, 2011 அன்று இராஜீவ் காந்தி பிறந்தநாளில், புதுடில்லியில் ராகுல் காந்தி முன்னிலையில் காங்கிரசு கட்சியில் இணைந்தார்.[4] மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia