நந்தினி குப்தா (Nandini Gupta) பெமினா இந்திய உலக அழகி 2023 என முடிசூட்டப்பட்ட ஓர் இந்திய அழகுப் போட்டியாளர் ஆவார். குப்தா உலக அழகி 2025-இல் இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்துவார்.
ஆரம்பகால வாழ்க்கை மற்றும் கல்வி
குப்தா 2003-இல் இராசத்தான் மாநிலம் கோட்டாவில் பிறந்தார்.[1][2] இவர் தனது பள்ளிப் படிப்பைத் தூய பால் மூத்தோர் மேல்நிலைப் பள்ளியில் முடித்தார்.[3] இவர் மும்பையில் உள்ள லாலா லஜ்பத் ராய் கல்லூரியில் வணிக மேலாண்மையில் பட்டம் பெற்றுள்ளார்.[4]
அலங்காரப் போட்டிகள்
குப்தா, தனக்கு 10 வயதிலிருந்தே இந்திய அழகியாக ஆக வேண்டும் என்று ஆசைப்பட்டதாகக் கூறியுள்ளார்.[3]
19 வயதில்[2] நந்தினி இராசத்தான் மாநிலத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி, ஏப்ரல் 15, 2023 அன்று மணிப்பூரின் இம்பாலில் நடந்த பெமினா இந்தியா அழகி 2023,[5][1][6][7][8][9] பட்டத்தை வென்றார்.[10][11] இவர் உலக அழகை 2025 போட்டியில் இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறார்.[1][12]