நயினார்கோயில் குமரய்யா கோயில்

அருள்மிகு குமரய்யா கோவில்
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:இராமநாதபுரம்
அமைவிடம்:நயினார்கோயில், பரமக்குடி வட்டம்[1]
சட்டமன்றத் தொகுதி:பரமக்குடி
மக்களவைத் தொகுதி:இராமநாதபுரம்
கோயில் தகவல்
மூலவர்:முருகன்
சிறப்புத் திருவிழாக்கள்:பங்குனி உத்திரம்
வரலாறு
கட்டிய நாள்:ஏழாம் நூற்றாண்டு[சான்று தேவை]

நயினார்கோயில் குமரய்யா கோயில் தமிழ்நாட்டில் இராமநாதபுரம் மாவட்டம், நயினார்கோயில் என்னும் ஊரில் அமைந்துள்ள முருகன் கோயிலாகும்.[1]

வரலாறு

இக்கோயில் ஏழாம் நூற்றாண்டைச் சேர்ந்தது.[சான்று தேவை]

கோயில் அமைப்பு

இக்கோயிலில் முருகன் சன்னதியும், தண்டபாணி, விநாயகர் உபசன்னதிகளும் உள்ளன. இக்கோயில் முதன்மைத் திருக்கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. வழக்கு நிலுவையில் இருப்பதால் நடைமுறை நிருவாகியால் நிர்வகிக்கப்படுகிறது.[2]

பூசைகள்

இக்கோயிலில் ஒருகாலப் பூசை திட்டத்தின் கீழ் சிவாகம முறைப்படி ஒருகாலப் பூசை நடக்கின்றது. பங்குனி மாதம் பங்குனி உத்திரம் முக்கியத் திருவிழாவாக நடைபெறுகிறது.

மேற்கோள்கள்

  1. 1.0 1.1 "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 1". தமிழ் இணையக் கல்விக்கழகம். Retrieved பெப்ரவரி 19, 2017.
  2. "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 2". தமிழ் இணையக் கல்விக்கழகம். Retrieved பெப்ரவரி 19, 2017.
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya