நரசிங்கம்
நரசிங்கம் என்பது இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தின் மதுரை மாவட்டத்திலுள்ள மதுரை கிழக்கு ஊராட்சி ஒன்றியத்தின் நரசிங்கம் ஊராட்சிக்குட்பட்ட ஒரு புறநகர்ப் பகுதியாகும்.[1][2] அமைவிடம்கடல் மட்டத்திலிருந்து சுமார் 158.75 மீ. உயரத்தில், (9°57′44″N 78°11′37″E / 9.9623°N 78.1935°E) என்ற புவியியல் ஆள்கூறுகள் கொண்டு நரசிங்கம் அமையப் பெற்றுள்ளது. மக்கள்தொகை பரம்பல்2011 இந்திய மக்கள் தொகைக் கணக்கெடுப்பு அடிப்படையில், நரசிங்கம் ஊரின் மொத்த மக்கள்தொகை 5,971 பேர் ஆகும். இதில் 2,987 பேர் ஆண்கள் மற்றும் 2,984 பேர் பெண்கள் ஆவர்.[3] சமயம்இந்துக் கோயில்யோகநரசிங்கப் பெருமாள் கோயில் என்ற பெருமாள் கோயில் ஒன்று நரசிங்கம் பகுதியில் அமைந்துள்ளது. இக்கோயிலானது, தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டின் பராமரிப்பில் இயங்குகிறது.[4] அரசியல்நரசிங்கம் பகுதியானது, மதுரை கிழக்கு (சட்டமன்றத் தொகுதி) வரம்புக்கு உட்பட்டதாகும். மேலும் இப்பகுதி, மதுரை மக்களவைத் தொகுதி சார்ந்தது.[5] மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia