நர்கந்தா
நர்கந்தா (Narkanda) என்பது இந்திய மாநிலமான இமாச்சல பிரதேசத்தில் உள்ள சிம்லா மாவட்டத்தில் உள்ள ஒரு நகரம் மற்றும் நகரப் பஞ்சாயத்து ஆகும். இது இமாச்சல பிரதேசத்தில் உள்ள இந்துஸ்தான்-திபெத் சாலையில் (என்ஹெச் 5) 2708 மீட்டர் உயரத்தில் ஒரு தேவதாரு காட்டுக்குள் உள்ளது. இது சிம்லாவிலிருந்து சுமார் 65 கி.மீ தூரத்தில் உள்ளது. மேலும் இமயமலை மலைத்தொடரால் சூழப்பட்டுள்ளது. இது குளிர்காலத்தில் ஒரு பனிச்சறுக்கு இடமாகும் . இது சிம்லாவை இராம்பூருடன் இணைக்கிறது. மேலும் இமாச்சலப் பிரதேசத்தின் பிரதான ஆப்பிள் தோட்டங்களுக்கான இணைப்பான தானேதருக்கு ஒரு மாற்றுப்பாதையாக இருக்கிறது. அங்கு சத்யானந்தா ஸ்டோக்ஸ் [1] என்ற அமெரிக்கர் ஆப்பிள் சாகுபடியை இமாச்சல பிரதேசத்திற்கு அறிமுகப்படுத்தினார். நிலவியல்![]() ![]() நர்கந்தா 31.27 ° வடக்கிலிம் 77.45 ° கிழக்கிலும் அமைந்துள்ளது. [2] இதன் சராசரி உயரம் 2708 மீட்டர் (8599 அடி) ஆகும் . 3200 மீ (11,155 அடி) உயரத்தில் உள்ள அட்டு சிகரம் நர்கந்தாவிலிருந்து 8 கி.மீ தூரத்தில் உள்ளது. ஆப்பிள் பழத்தோட்டங்களுக்கு பெயர் பெற்ற கோட்கர் நர்கந்தாவிலிருந்து 16 கி.மீ தூரத்தில் உள்ளது . நர்கந்தாவிலிருந்து 18 கி.மீ தூரத்தில் உள்ள குமார்சைன் அருகிலுள்ள நகரமாகும். நர்கந்தா குமார்சேன் நிர்வாக துணைப்பிரிவின் கீழ் வருகிறது. சத்யானந்த் ஸ்டோக்ஸ் ஆப்பிளை இந்த இடத்திற்கு அறிமுகப்படுத்தி இந்த பகுதியின் பொருளாதாரத்தை வலுப்படுத்த உதவினார். இங்கு இன்று ஆப்பிள் உற்பத்தி மூலம் ரூ .3,000 கோடி நேரடி மற்றும் மறைமுக வருமானம் ஈட்டப்படுகிறது. காலநிலைஇந்த நகரம் ஆண்டு முழுவதும் ஒரு இனிமையான வானிலையை கொண்டுள்ளது. ஏப்ரல் முதல் சூன் வரையிலான கோடை காலத்தில், அதிகபட்ச வெப்பநிலை 20 ° C ஆகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 10. C ஆகவும் இருக்கும். சூலை முதல் செப்டம்பர் மாதங்கள் வரை, நர்கந்தாவில் பருவமழை இருக்கும். அதே வேளையில், நவம்பர் முதல் மார்ச் வரையிலான மாதங்கள் இந்த நகரம் பனியால் மூடப்பட்டிருக்கும். இந்த நேரத்தில் அதிகபட்ச வெப்பநிலை 7-8 ° C மற்றும் இரவுகளில் 5 முதல் 10 ° C வரை குறையும். [3] தாவரங்கள்இப்பகுதியில் ஒரு பெரிய மிதமான காடு ஆதிக்கம் செலுத்துகிறது. பெரும்பாலும் கோனிஃபர், கருவாலி மரம், மேப்பிள், பாப்புலஸ், அஸ்குலஸ், கோரிலஸ், ஹோலி போன்ற இனங்கள் உள்ளன. இந்த மரங்களைத் தவிர, மரமஞ்சள் போன்ற பல்வேறு வகையான புதர்கள் மற்றும் மலர் தாவரங்கள் இப்பகுதியில் வளர்கின்றன. சமீபத்தில், ஆப்பிள் பழத்தோட்டங்களுக்காக காடு அகற்றப்பட்டது. மக்கள் தொகை2010 மக்கள் தொகைக் கணக்கெடுப்வின்படி ,[4] நர்கந்தாவில் 2712 பேர் என்ற அளவில் மக்கள் தொகை இருந்தது. மக்கள்தொகையில் ஆண்கள் 62 சதவீதமும் பெண்கள் 38 சதவீதமாகவும் உள்ளனர். நர்கந்தாவின் சராசரி கல்வியறிவு விகிதம் 80 சதவீதமாகும். இது தேசிய சராசரியான 59.5 சதவீதத்தைவிட அதிகமாகும்: ஆண் கல்வியறிவு 85 சதவீதம், மற்றும் பெண் கல்வியறிவு 72சதவீதம். நர்கந்தாவில், 15 சதவீத மக்கள் 6 வயதுக்குட்பட்டவர்கள். இங்குள்ள சொந்த மொழி பகாரி, ஆனால் இந்தி மற்றும் ஆங்கிலம் கூட பேசப்படுகின்றன. குறிப்புகள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia