நர்க்கொண்டம் தீவு
நர்க்கொண்டம் அல்லது நரகக்குன்றம் தீவு அந்தமான் கடலில் அமைந்துள்ள ஒரு சிறிய எரிமலை தீவு ஆகும். தீவின் உச்சி கடல் மட்டத்திலிருந்து 710 மீ உயரத்திற்கு உயர்கிறது, மேலும் இது அண்டிசைட் எனப்படும் எரிமலைப் பாறைகளால் உருவானது. இது அந்தமான் தீவுகளின் ஒரு பகுதியாகும், இதன் முக்கியப்பகுதி மேற்கு நோக்கி சுமார் 124 km (77 mi) உள்ளது . நர்க்கொண்டம் தீவு இந்திய யூனியன் பிரதேசமான அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளின் ஒரு பகுதியாகும். சுமார் 6.8 சதுர கிலோமீட்டர் பரப்பளஉ உடைய இந்த தீவு சிறியதாகும். இது ஒரு செயலற்ற எரிமலை என இந்திய புவியியல் ஆய்வு மையம் வகைப்படுத்தியது. சொற்பிறப்புநர்க்கொண்டம் என்ற பெயர் தமிழ்ச் சொல்லான "நரகத்தின் குழி" என்று பொருள்படும் நரக-குன்றம் [4] என்பதிலிருந்து பெறப்பட்டதாகும் இருப்பினும் இது இந்தத் தீவுக்கும் பாரன் தீவுக்கும் இடையிலான குழப்பத்தின் விளைவாக இருக்கலாம்.[5] வரலாறு1986 வரை பர்மா நர்க்கொண்டம் தீவின் மீது இறையாண்மையைக் கோரியது. இரு நாடுகளுக்கிடையிலான அந்தமான் கடல், கோகோ சேனல் மற்றும் வங்காள விரிகுடா ஆகிய கடல் எல்லையை வரையறுப்பது தொடர்பாக இந்தியாவுடன் உடன்பாட்டை எட்டியதில் இந்தக் கோரிக்கை கைவிடப்பட்டது.[6][7] 1983 ஆம் ஆண்டு நர்கொண்டம் தீவின் சரிவுகளில் ஒரு கலங்கரை விளக்கம் நிறுவப்பட்டது.[8] நிலவியல்போர்ட் பிளேரிலிருந்து வடகிழக்கில் 256 கி. மீ தூரத்திலும் செயல்படும் எரிமலையைக் கொண்ட பாரன் தீவின் தென்மேற்கே (தோராயமாக 150) கி.மீ) தூரத்திலும் தீவு உள்ளது. நர்கொண்டம் தீவு பர்மாவிலிருந்து 160 மைல் தொலைவில் உள்ளது, இது விசாகப்பட்டினத்திலிருந்து ( இந்தியாவின் பிரதான நிலப்பகுதியின் ஒரு பகுதி) கிட்டத்தட்ட 800 மைல் தொலைவில் உள்ளது. இது கிழக்கு எரிமலை தீவுகளைச் சேர்ந்தது. இந்த தீவு சிறியது, இதன் பரப்பளவு 7.63 km2 (2.95 sq mi) ஆகும். தீவு பெரும்பாலும் காடுகள் நிறைந்ததாகும். நர்க்கொண்டம் தீவு ஒரு எரிமலையிலிருந்து உருவானதாகும். இது அண்மைக் காலங்களில் செயல்பாட்டில் இருந்ததாகத் தெரியவில்லை, ஜூன் 8, 2005 வரை எரிமலையிலிருந்து "மண் மற்றும் புகை" வெளியேற்றப்பட்டதாக செய்திகள் வந்தன. 2004 இந்தியப் பெருங்கடல் பூகம்பம் மாக்மாவை நிலத்தடிக்கு நகர்த்தியதாகக் கருதப்படுகிறது, மேலும் இது தற்போதைய செயல்பாட்டுடன் தொடர்புடையதாக இருக்கலாம். அறிக்கைகள் துல்லியமாக இருந்தால், அறிவியல் ஆய்வுகள் துல்லியமாகக் கணக்கிட்டால் இந்தத் தீவின் செயல்பாட்டு நிலையை அந்த ஆய்வுகள் ஒருவேளை மாற்றி அறிவிக்கக்கூடும். நர்க்கொண்டம் தீவு அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளின் கிழக்குமுனையைக் கொண்டதாகும். . நர்க்கொண்டம் மலைநர்க்கொண்டம் தீவின் எரிமலையனது 710 மீட்டர் உயரத்தில் உள்ளது அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளில் இரண்டாவது மிக உயரமான இடம் இதுவேயாகும். முதலாவது 752 மீட்டர் உயரமான, வடக்கு அந்தமான் தீவில் உள்ள சாடில் முனையாகும். நிர்வாகம்நர்க்கொண்டம் தீவு வடக்கு மற்றும் மத்திய அந்தமான் நிர்வாக மாவட்டத்தைச் சேர்ந்தது,[9] இது டிக்லிபூர் வருவாய் வட்டத்தின் ஒரு பகுதியாகும்.[10] கிராமம் காவல் நிலையத்திற்கு அருகில் உள்ளது. விளக்கப்படங்கள்இங்கு ஒரு கிராமம் மட்டுமே உள்ளது. இந்தியாவின் 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, தீவில் ஒரு வீடு உள்ளது. பயனுள்ள கல்வியறிவு விகிதம் (அதாவது 6 வயது மற்றும் அதற்கும் குறைந்த குழந்தைகளைத் தவிர்த்து மக்கள்தொகையின் கல்வியறிவு விகிதம்) 100% ஆகும்.[11]
இக்கிராமத்தின் பதினாறு குடியிருப்பாளர்கள் (அனைத்து மேற்பார்வை, காவல் பணியாளர்கள்) அனைவரும் வடகிழக்கு மூலையில் ஒரே வீட்டில் வசித்து வருகின்றனர். அவர்கள் தேங்காய் மற்றும் வாழைப்பழங்களை பணிசெய்யும் இடத்திற்கு அருகிலுள்ள ஒரு சிறிய தோட்டத்தில் அறுவடை செய்கிறார்கள். குறிப்புகள்
வெளி இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia