நல்லெண்ணெய்
நல்லெண்ணெய் என்று பரவலாக வழங்கப்படுவது, எள் என்னும் தானியத்திலிருந்து பெறப்படும் நெய்யாகும். எண்ணெய் என்பது எள், நெய் ஆகிய இரண்டு சொற்களின் கூட்டுச் சொல் (எள் + நெய் = எண்ணெய்) ஆகும். எண்ணெய் என்ற சொல் எல்லா நெய்களையும் குறிக்கும் பொதுச் சொல் ஆகிவிட்டதனால், எள்ளின் நெய்யைக் குறிக்க நல்லெண்ணெய் என்ற சொல் பயன்பாட்டுக்கு வந்தது. இது பொதுவாக சமையலுக்குப் பயன்படுகிறது. இதை தென்னிந்தியாவில் அதிகமாக சமையலுக்குப் பயன்படுத்துகிறார்கள் மற்றும் சீனர்கள், கொரியர்கள், சப்பானியர்கள் தங்கள் சமையலில் நல்லெண்ணெயை உபயோகிக்கின்றனர்.[1][2][3] நல்லெண்ணெய் இந்திய மருத்துவ முறைகளில் பல பயன்பாடுகளைப் பெற்றுள்ளது. இது எதிர் ஆக்சிகரணியாக செயல்பட்டு இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தப் பயன்படுகிறது. இது பிடித்துவிடல், உருவுதல் போன்ற ஆயுர்வேத மருத்துவ முறைகளில் அதிகமாகப் பயன்படுகிறது.
மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia