நவதானியம்நவதானியங்கள் (Navdhānya) என்பன கோதுமை, நெல், துவரை, பாசிப்பயறு, கொண்டைக்கடலை, மொச்சை, எள், உளுந்து மற்றும் கொள்ளு ஆகியவையாகும்.[1][2] நவதானியங்கள் என்பது பல இந்திய மொழிகளில் "ஒன்பது தானியங்கள்" என்று பொருள்படும். இந்த ஒன்பது தானிய வகைகளும் இந்திய உணவு பண்டங்களில் பெரும்பான்மையாக உபயோகப்படுத்தப்படும் முக்கிய பொருட்களாகும்.[3] இந்து இறையியல்இந்து அண்டவியலில், நவதானியங்கள் என்பது நவக்கிரகங்களை (ஒன்பது கிரகங்கள்) குறிப்பவையாக கருதப்படுகிறது.[4] முறையே தானியங்கள் பின்வரும் கிரகங்களை குறிக்கின்றன:[5]
வழிபாடு மற்றும் சடங்குகள்இந்து சமய நம்பிக்கையுடையோர் புதிதாக வீடு கட்டுதல், திருமணம் மற்றும் சுப நிகழ்வுகளுக்காக வீடுகளின் முன்பு பந்தல் அமைத்தல் போன்ற நிகழ்வுகளுக்கான சில வழிபாடுகளின் போது நவதானியத்தை வழிபாட்டுப் பொருளாக வைத்து வழிபடும் வழக்கம் இருக்கிறது.[6][7] உபநயனம் மற்றும் வித்யாரம்பம் போன்ற பாரம்பரிய இந்து சடங்குகள் நவதானியங்கள் வழங்குவதை அல்லது படைப்பதை உள்ளடக்கியன.[8] சரஸ்வதி பூஜை போன்ற பண்டிகைகளின் போது, நவதானியத்தில் புதிய எழுத்தோலை மற்றும் எழுதும் கருவிகள் வைக்கப்படுகின்றன.[9] தென்னிந்தியாவில் பாரம்பரியமாக முலைப்பாரி என்று அழைக்கப்படும் இந்த உணவு தானியங்களின் முளைகள் மாரியம்மன் திருவிழாக்கள் மற்றும் சடங்குகளில் ஒரு முக்கிய பங்கு வகிக்கின்றன.[10] இந்த விழாக்களின் போது கோவில்களில் நவதானிய விதைகள் தட்டுகள் அல்லது தொட்டிகளில் வளர்க்கப்படுகின்றன. விதைகள் ஆரோக்கியமாக முளைத்தால், அது ஒரு நல்ல சகுனமாக கருதப்படுகின்றது.[11] மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia