நவீன் ஜின்டால்
நவீன் ஜின்டால் (Naveen Jindal) ஓர் இந்தியத் தொழிலதிபர் மற்றும் ஹரியானாமாநிலத்தின் குருச்சேத்திரம் தொகுதியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்.[1]. இவர் ஜின்டால் குழுமத்தின் தலைவராவார்[2] ஜின்டால் குழுமம் இவரது தந்தை ஓபி ஜின்டால் என்பவரால் நிறுவப்பட்டது 14வது மற்றும் 15வது மக்களவை உறுப்பினராக குருச்சேத்திரம் தொகுதியில் இருந்து தேர்வு செய்யப்பட்டார் [3] ஆரம்பகால வாழ்க்கைஓம் பிரகாசு ஜின்டாலுக்கு மகனாக மார்ச்19,1970ல் ஹரியானா மாநிலத்தின் சஹிசாரில் பிறந்தார். இவரிந் தந்தை மற்றும் தாய் சாவித்ரி ஜின்டால் முன்னாள் ஹரியானா மாநில அமைச்சராவார்கள். [4] அரசியல்படிக்கும் காலங்களில் அரசியலில் ஆர்வம் கொண்டிருந்தார். மாணவர் தலைவராக டெக்சஸ்பல்கலைகழகத்தில் பொறுப்பு வகித்தார். முதுகலை படிப்பை முடித்து நாடு திரும்பி 2004ம் ஆண்டுஇந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் சார்பில் மக்களவை உறுப்பினராக மக்களால் தேர்வு செய்யப்பட்டார், 2009ம் ஆண்டிலும் தேர்வு பெற்றார். 2014ம் ஆண்டு தேர்தலில் தோல்வியைத் தழுவினார். பதவியின் போது பல்வேறு நாடாளுமன்ற குழுக்களில் உறுப்பினராகப் பணியாற்றியுள்ளார் சர்ச்சைகள்2012ம் ஆண்டு செப்டம்பர் மாதம் இந்தியாவின் ஊழல்களில் ஒன்றான நிலக்கரி ஊழலில் அதிகாரத்தைப் பயன்படுத்தி அதிக விலைக்கு விற்றதாக, தேசிய சனநாயக கூட்டணி ஆட்சி தொடங்கி ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி வரை நடைபெற்றதாக குற்றம் சாட்டப்பட்டது. மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia