நாகினி
நாகினி என்பது கலர்ஸ் தொலைக்காட்சியில் 1 நவம்பர் 2015 முதல் ஒளிபரப்பாகும் இந்தி மொழி மீயியற்கை கனவுருப்புனைவு பரபரப்பூட்டு காதல் மற்றும் பழிவாங்குதல் நிறைந்த தொலைக்காட்சித் தொடரின் தமிழ்ப்பதிப்பாகும். இத்தொடரை பாலாஜி டெலிபிலிம்ஸ் தயாரிப்பு நிறுவனம் சார்பில் ஏக்தா கபூர் மற்றும் ஷோபா கபூர் இணைந்து தயாரிக்க,[1] சாந்தாராம் வெர்மா, ரஞ்சன் குமார் சிங் ஆகியோர் இயக்கியுள்ளனர். இத்தொடர் இச்சாதாரி நாகினி என்றழைக்கப்படும் நினைத்த உருவிற்கு மாறும் பாம்புப் பெண்களின் வாழ்வை அடிப்படையாகக் கொண்டுள்ளது. ஒவ்வொரு பருவத்திலும் பழிவாங்குதல் அல்லது தீயோரிடமிருந்து நாகமணியைப் பாதுகாத்தல் ஆகியவற்றை மையமாகக் கொண்டு கதைக்களம் அமைகிறது. இதன் முதல் பருவம் 1 நவம்பர் 2015 முதல் 5 ஜூன் 2016 வரை ஒளிபரப்பானது.[2] இந்த பருவம் மிகப்பெரிய வெற்றியை கண்டது. இதில் மௌனி ராய், அதா கான், அர்ஜுன் பிஜ்லானி, சுதா சந்திரன் ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.[3][4] இரண்டாவது பருவம் 8 அக்டோபர் 2016 முதல் 25 ஜூன் 2017 வரை ஒளிபரப்பப்பட்டது.[5][6][7] இதில் மௌனி ராய், அதா கான், சுதா சந்திரன், கரண்வீர் போரா ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.[8][9] மூன்றாவது பருவம் 2 ஜூன் 2018 முதல் 26 மே 2019 வரை ஒளிபரப்பப்பட்டது.[10] இதில் சுர்பி ஜியோதி, அனிதா ஹசனந்தனி, பியர்ல் வி பூரி, மௌனி ராய், அதா கான், சுதா சந்திரன், கரண்வீர் போராஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.[11][12][13] நான்காவது பருவம் 'நாகினி: விதியின் விஷ விளையாட்டு' என்ற புதிய தலைப்புடன் கலர்ஸ் தமிழில் 2019 டிசம்பர் 14 முதல் 2020 ஆகஸ்ட் 8 வரை ஒளிபரப்பப்பட்டது.[14] இதில் நியா ஷர்மா, விஜயேந்திர குமேரியா, ஜாஸ்மின் பசின், அனிதா ஹசனந்தனி ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.[15][16][17][18] ஐந்தாவது பருவம் 9 ஆகஸ்ட் 2020 முதல் ஒளிபரப்பாகின்றது.[19] இதில் சுர்பி சந்த்னா, ஷரத் மல்ஹோத்ரா, மோஹித் சேகல் ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.[20] ஆறாவது பருவம் கலர்ஸ் தமிழில் 12 மார்ச் 2022 முதல் வாரந்தோறும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை இரவு 8 மணிக்கு ஒருமணிநேரம் ஒளிபரப்பாகிறது. இதில் தேஜஸ்வி பிரகாஷ், சிம்பா நாக்பால், மஹெக் சஹல், ரஷ்மி தேசாய் ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். பருவங்கள்
கதைச்சுருக்கம்பருவம் 1ஷிவன்யா மற்றும் அவரது ஒன்றுவிட்ட சகோதரி ஷ்ரேயா ஆகிய இருவரும் நினைத்த உருவத்திற்கு மாறும் இச்சாதாரி நாகினிகள் ஆவர். சக்தி வாய்ந்த நாகமணியின் இருப்பிடத்தைத் தெரிவிக்காததால் ஷிவன்யாவின் பெற்றோரை ஹரிஷ்,சூரியா,விவேக்,கைலாஷ்,யமுனா சேர்ந்து கொன்றுவிடுகிறார்கள். அவர்களில் ஹரீஷ், விவேக், கைலாஷ் ஆகிய மூன்று நபர்களை மட்டுமே தன் தாயின் கண்களில் ஷிவன்யாவால் காண முடிந்தது.சூரியா மற்றும் யமுனாவை தன் தாயின் கண்களில் இருளால் பார்க்கமுடியவில்லை. அந்த ஐந்து கொலைகாரர்களையும் பழிவாங்குவதற்காக ஷிவன்யா ஹரீஷின் வீட்டிற்குள் வேலைக்காரியாக நுழைந்தார். ஹரீஷ்-யமுனா தம்பதியரின் மகனான கார்த்திக் ஷிவன்யாவின் மீது காதல் கொள்கிறார். பழிதீர்க்க ஹரீஷின் வீட்டில் நிரந்தரமாக இருக்க வேண்டும் என்பதால் ஷிவன்யா கார்த்திக்கைத் திருமணம் செய்து கொண்டார். ஆனால் நாளடைவில் அவர் கார்த்திக்கை விரும்ப ஆரம்பித்தார். ஷிவன்யா முதலில் விவேக்கைக் கொன்றார். பிறகு ஷ்ரேயா மூலம் நான்காவது கொலைகாரர்; ஹரீஷின் நண்பர் சூரியா என்பதை அறிந்த அவர் ஷ்ரேயாவுடன் சேர்ந்து சூர்யாவைக் கொன்றார். பிறகு ஷிவன்யா தன் நாக ரூபத்தில் இருக்கும் போது அவரை ருத்ரம்மாவின் மாய கத்தியால் கார்த்திக் தாக்கினார். இதனால் ஷிவன்யா தன் சக்திகளை இழந்துவிட்டார். பிறகு கிருஷ்ண பூஜையின் பலனாக அதீத சக்திகளுடன் மீண்ட ஷிவன்யா கைலாஷைக் கொன்றார். பிறகு அந்த ஐந்தாவது கொலைகாரர் யமுனா என்ற உண்மை தெரிய வருகிறது. மேலும் அவர் கார்த்திக்கின் உண்மையான தந்தையாகிய சிவசங்கரனின் சகோதரி ஆவார். ஷ்ரேயா தன்னையறியாமல் கார்த்திக்கை விரும்ப ஆரம்பிக்கிறார். ஆனால் அது தவறு என்று உணர்ந்த அவர் தன்னைக் கட்டுப்படுத்திக் கொள்ள முயல்கிறார். இதை அறிந்த யமுனா, அவரை ஷிவன்யாவிற்கு எதிராகத் தூண்டிவிடுகிறார். இதனால் ஷ்ரேயா ஷிவன்யாவின் எதிரியாக மாறுகிறார். ஷ்ரேயா ஹரீஷைக் கொன்ற பிறகு அங்கு ஷிவன்யா வருகிறார் அதை கார்த்திக் பார்த்துவிடுகிறார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் ஷிவன்யாதான் ஹரீஷையும் தன் குடும்பத்தாரையும் கொன்றார் என்று நினைத்து ஷி ஷிவன்யாவை வெறுக்கத் தொடங்கினார். யமுனாவின் உண்மை முகத்தை அறிந்த பிறகு கார்த்திக், ஷிவன்யாவிற்கு உறுதுணையாக இருந்தார். இருவரும் இணைந்து தங்கள் எதிரிகளிடம் இருந்து நாகமணியை மீட்கின்றனர். சிவன்யா காளியின் அருளால் காளி அவதாரம் எடுத்து யமுனாவைக் கொன்று தன் பழியைத் தீர்க்கிறார்.ஷிவன்யா மகிழ்மதியினரை மகிழ்மதி சுவற்றில் 25 ஆண்டுகளுக்கு வெளியே வர முடியாமால் அடைத்து வைக்கிறார்.மகிழ்மதியைச் சேர்ந்தவர்கள் 25 ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே நாகமணியைப் பெற முயற்சிக்க இயலும். எனவே அவர்கள் ஷ்ரேயாவின் உதவியைப் பெற வேண்டும் என்ற நோக்கத்தில் அவரை ஒரு சுவற்றில் அடைத்து வைக்கிறார்.பிறகு ஷிவன்யா கற்பமாகிறார்.இவ்வாறு முதல் பருவம் நிறைவடைகிறது. பருவம் 2மூன்று மாதங்களுக்குப் பிறகு கார்த்திக்-ஷிவன்யா தம்பதியருக்கு ஷிவானி என்ற மகள் பிறக்கிறார். பிறகு கார்த்திக் இறந்து விடுகிறார். 25 ஆண்டுகள் கடந்து சென்றன. தற்போது ஷிவன்யா .ஒருவேளை தன் மகளும் ஒரு இச்சாதாரி நாகனியாக மாறி தன்னைப்போல் துன்பப்படுவாளோ என்று பயப்படுகிறார். 25 வயது முழுமையடையும் முன்பு, ஷிவானிக்கு திருமணமாகி விட்டால் அவரால் நாகினியாக மாற இயலாது. ஆகவே ஷிவானியின் காதலன் ராக்கியுடன் அவரை திருமணம் செய்து வைத்துவிட ஷிவன்யா நினைக்கிறார். 25 ஆண்டுகள் கடந்துவிட்டதால் மகிழ்மதியினரும் ஷ்ரேயாவும் நாகமணியை அடையும் நோக்கத்துடன் மீண்டு வந்தனர். அவந்திகா 25 ஆண்டுகளுக்கு முன்பு யமுனாவிற்கு உயிர் கொடுத்தார் அவந்திகாவின் உதவியால் யமுனாவும் உயிருடன் இருந்தார். யமுனா, ராக்கியின் பெரியம்மா என்பதை ஷிவன்யா அறியவில்லை. திருமண நாளன்று ஷ்ரேயா, யமுனா, அவந்திகா, கபாலிக்கா, நிதி,அமர்,விக்ரம் மற்றும் மானவ் ஆகியோர் சேர்ந்து ஷிவன்யாவைக் கொன்றுவிடுகின்றனர்.ஷிவன்யாவின் குடும்பத்தினர்கள் மற்றும் உறவினர்களையும் கொன்றுவிடுகிறார்கள்.இதனால் திருமணம் நின்றுவிடுகிறது. ஷிவானி அந்த 8 கொலைகாரர்களைப் பழிவாங்குவதற்க்காக இச்சாதாரி நாகினியாக மாறிவிடுகிறார்.ஷிவானி அமரை காளி கோவிலுக்கு வரவைத்து ஷிவானி அமரைக் கொன்றுவிடுகிறார்.அவளுக்கு உதவிசெய்ய ருத்ரன் என்ற இச்சாதாரி நாகம் வருகிறார். பிறகு ஷிவானி ருத்ரனின் உதவியுடன் ஷிவானி கபாலிக்காவை கொன்றுவிடுகிறார். ருத்ரனின் உதவியுடன் ஷிவானி மானாவைக் கொன்றுவிடுகிறார். பிறகு ஷிவானி விக்ரமை கொள்ள முடிவெடுக்கிறார். ஷிவானியும் ருத்ரனும் விக்ரமை கொன்றுவிடுகிறார்கள். அதன்பிறகு அவந்திகா ருத்ரனைக் கொன்றுவிடுகிறார். பிறகு ஒரு திட்டத்தின் மூலம் அவந்திகாவின் சக்திகள் அனைத்தையும் இழக்கவைக்கிறார்.பிறகு ஷிவானி அவந்திகாவின் சாவின் ரகசியத்தை அறிந்துகொண்டு ஷிவானி அவந்திகாவையும் கொன்றுவிடுகிறார். அதன் பிறகு ஷிவானியின் சகோதரி கௌதமியை ராக்கியின் சித்தி நிதி கொ ன்றுவிடுகிறார். பிறகு ஷிவானி நிதியையும் கொன்றுவிடுகிறார்.தஷிக வம்சத்தின் நாகராணியான தக்ஷிகாவின் தலையைக்கொண்டு ஷ்ரேயாவை சிலையாக மாற்றி விடுகிறார். இறுதியாக அவர் யமுனாவையும் கொன்று விடுகிறார். அப்போது அதை நேரில் கண்டறிந்த ராக்கி அதிர்ச்சி அடைந்தார். அன்று முதல் அவர் ஷிவானியை வெறுக்கத் தொடங்கினார். ஒரு சாமியார் கொடுத்த மருந்தால் யமுனா உயிர் பிழைத்தார். பிறகு ராக்கி தக்ஷக் வம்சத்தைச் சேர்ந்த ஒரு இச்சாதாரி நாகம் என்று தெரிய வருகிறது. அவன் அந்த வம்சத்தின் ராஜாவாகவும் இருந்தான். இதனால் அவரது கை பட்டவுடன் சிலையாாக இருந்த ஷ்ரேயா உயிர் பெற்றார். பிறகு ஷ்ரேயா, தக்ஷிகாவைக் கொன்றுவிட்டு தக்ஷிக நாகராணியாக மாறினார். யமுனா, ராக்கியின் தந்தை மகேந்திர பிரதாப்,மஞ்சுஷா மற்றும் ரன்வீர் ஆகியோர் கார்த்திக்கை 25 வருடங்களுக்கு முன்பு கொன்றனர் அதை அறிந்த ஷிவானி அவர்களையும் பழிவாங்க முடிவெடுக்கிறார்.பிறகு ராக்கி சிவானியுடன் சேர்ந்து கொலைகாரர்களைப் பழிவாங்க உதவுகிறார்.முதலில் ஷிவானி மஞ்சுஷாவைக் கொள்கிறார்,அதன் பிறகு ராக்கியுடன் சேர்ந்து ரன்வீரைக் கொள்கிறார்,பிறகு ராக்கியின் தந்தை மகேந்திர பிரதாப் தான் ராக்கியின் தாயை கொன்றது தெரியவருகிறது பிறகு அவரையும் கொன்றனர் இது ஷ்ரேயாவிற்குத் தெரியவில்லை. ராக்கியும் ஷ்ரேயாவின் பக்கம் இருப்பது போலவே நடித்து வந்தார். பிறகு ராக்கி மற்றும் ஷிவானி ஆகிய இருவரும் சேர்ந்து யமுனாவைக் கொன்றுவிட்டனர். இறுதியில் அவர்கள் அர்த்தநாரீஸ்வரர் அவதாரம் எடுத்து ஷ்ரேயாவையும் முழுமையாக அழித்து விட்டனர். பிறகு ராக்கி, திடீரென திரிசூலத்தால் ஷிவானியைக் கொல்கிறார். அதன் காரணம் தெரியவில்லை. இவ்வாறு விடைதெரியா கேள்வியுடன் இரண்டாம் பருவம் நிறைவடைகிறது. பருவம் 3நாகங்களான ருஹியும் விக்ராந்தும் பல வருடங்கள் கழித்து மீண்டும் காதலர்களாக சந்தித்தனர். அப்போது பணக்கார சேகர் சகோதரர்களால் விக்ராந்த் கொல்லப்படுகிறார். அவர்களைப் பழிவாங்க ருஹி உறுதியேற்கிறார். பல மாதங்கள் கழித்து, விஷாகா கண்ணா என்ற நாகினி, பணக்கார முதலீட்டாளராக சேகர் வீட்டிற்குள் நுழைகிறார். அவர் சேகர் சகோதர்களில் ஒருவனைக் கொன்றுவிடுகிறார். அண்ணன் மாஹிர், ருஹியின் மறுபிறவியான மீனாவை மணக்கிறார். நாகமணியைப் பெறுவதற்காக சதித்திட்டம் செய்து விக்ராந்த் தனது இறப்பைப் போலியாக நிகழ்த்தியது தெரியவருகிறது. சேகரின் மனைவியும் கொல்லப்பட்டு அவருக்கு பதிலாக விக்ராந்தின் தாய் சுமித்ரா என்ற நாகினி இருந்தார். விஷாகாவின் திட்டங்களை அறிந்த விக்ராந்த் அவரை திருமணம் செய்து கொண்டு அவருக்கு உதவ முடிவு செய்கிறார். சுமித்ராவின் நாகத் தீண்டலால் மாஹிர் தனது நினைவுகளை இழக்கிறார். பின்னர் சுமித்ரா மீனாவையும் அவருடைய கூட்டாளிகளையும் கொன்றுவிடுகிறார். பல மாதங்களுக்குப் பிறகு, மாஹிரின் அடுத்த திருமணத்திற்காக சுமித்ரா ஏற்பாடு செய்கிறார். இருப்பினும், மணமகள் மாறுவேடத்தில் மீனாவும் அவரது உறவினர்களாக விக்ராந்த் மற்றும் விஷ் ஆகியோரும் இருந்தது தெரியவருகிறது. ருஹியும் மாஹிரும் பின்னர் ஹுக்கும் மற்றும் விஷாகாவின் மகளான தாம்சியால் கொல்லப்படுகிறார்கள். சுமித்ரா நாகமணியைப் பெற்றார்; ஆனால் அது ஷிவாங்கியால் சபிக்கப்பட்டு இருந்ததால் தனது அனைத்து சக்திகளையும் இழந்திருந்தது. 25 வருடங்களுக்குப் பிறகு, மீனாவும் மாஹிரும் ஷ்ராவனி, மிஹிர் என்று மறுபிறவி எடுக்கின்றனர். ஷ்ராவனி நாக சக்திகளையும் தனது முந்தைய வாழ்க்கையைப் பற்றிய நினைவுகளையும் பெற்றதுடன் விக்ராந்த் மற்றும் விஷாகா ஆகியோருடன் இணைகிறாள். நாகமணியில் இருந்து சாபத்தை நீக்க சுமித்ராவும் தாம்சியும் திட்டமிட்டனர். எனவே ஷ்ராவனி நாகமணியைக் காக்க ஷிவானி வரவழைத்தார். ஷிவானி நாகமணியின் சக்திகளை மீட்டெடுத்தார். இரட்டை நாகினியான ஷ்ரேயா, ஷிவானியை கார்த்திக் மற்றும் ராக்கி வடிவத்தில் உருமாறி கொன்றார் என்று தெரியவருகிறது. பிறகு ஷிவானி ஷ்ரேயாவுடன் சண்டையிட்டு அவரை நிலத்தில் அடக்கம் செய்கிறார். கடைசியாக, ஷ்ரேயாவால் ஒரு அடித்தளத்தில் பூட்டப்பட்டிருந்த ராக்கி மற்றும் கார்த்திக் ஆகியோரை ஷிவானி மீட்கிறார். பிறகு சிவன்யாவை உயிர்பிக்கிறார் சிவன்யாவும் கார்த்திக்கும் சேர்ந்து சொர்கத்திற்கு செல்கின்றனர் . பிறகு கார்த்திக் மற்றும் ஷிவன்யா இருவரும் சொர்க்கத்தில் இணைந்தனர். ஷிவனி மற்றும் ராக்கி ஆகிய இருவரும் புதிய வாழ்க்கையை வாழத் தொடங்கினர். ஷ்ராவினி (மீனா), அதீத சக்திகளால் ஆசீர்வதிக்கப்பட்ட திரிசூலத்தால் ஷ்ரேயா, தாம்சி,சுமித்ரா ஆகியோரைக் கொன்று, மாஹிரை மணக்கிறார். பருவம் 4மானசா என்ற நாகினி தன் பெற்றோரின் எதிர்ப்பை மீறி கேஷவ் என்ற மனிதரை மணக்கிறார். இதனால் அவருக்குப் பிறக்கவுள்ள குழந்தையால் 25 வயது முழுமையடையும் வரை நாக சக்திகளைப் பெற இயலாது என்று அவரது தாய் சபிக்கிறார். பிறகு பாரீக் குடும்பத்தினரால் கேஷவ் கொல்லப்படுகிறார். அவர்களைப் பழிவாங்கும் நோக்கத்துடன் மானசா, தனது மகள் நந்திதாவை வளர்த்தார். தனது நாக சக்திகளைப் பெற 25 வயது முழுமையடையும் வரை நந்திதா காத்திருந்தார். ஆனால், நந்திதாவிற்கு பதிலாக பிருந்தா நாக சக்திகளைப் பெறுகிறார். பின்னர் மானசாவின் உண்மையான மகள் பிருந்தா என தெரியவருகிறது. அவர் பிறக்கும்போது நந்திதாவால் இடம் மாற்றபட்டார். பிருந்தா ஒரு நாகினி என்பதை அறிந்த நந்திதா அதை மானசாவிடம் தெரிவிக்காமல் மறைத்தார். மேலும் தனது தாயாருக்காக தான் மட்டுமே பழிவாங்க வேண்டும் என்று நினைத்த அவர் பிருந்தாவை கொலை செய்யவும் முயற்சித்தார், ஆனால் பிருந்தாவும் மானசாவும் சந்தித்து ஒன்றுசேர்ந்தனர். பிறகு பிருந்தா தேவ்வை மணந்தார். 3ஆம் பருவத்திலிருந்து விஷாகா நாகமணியை அடையும் நோக்கத்துடன் நந்திதாவிற்கு உதவி செய்ய வருகிறார். பிருந்தாவை தேடி தேவ் சிகப்பு கொடி கோயிலுக்கு செல்ல நாகமணியை தேவ் தொட்டதால் அவன் நெற்றிக்குள் அது புகுந்துவிட்டது. விசாகா தேவின் வீட்டில் investor ஆக நுழைகிறார். நுழைந்து பல பிரச்சினைகள் கொண்டு வருகிறார். விசாக மானசாவை கொல்கிறார். தூணில் அடைக்கப்பட்ட நந்திதாவை ஷலிதாவாக மாற்றி தேவுக்கும் மணமுடிக்கிறார். பிருந்தவின் வளர்ப்பு தாயான ஸ்வரா பிருந்தவுக்கு உதவி செய்கிறார் பிருந்தாவும் நாகராணி ஷ்ராவனியும் இணைந்து விஷாகாவைக் கொன்றனர், ஷ்ரேயா ஷலாகாவைக் கொன்றார். தேவ் இறந்துபோனதைக் கண்ட பிருந்தா மனமுடைந்தார். பிறகு நாகராணி ஷ்ராவணி, நாகேஸ்வரி என்ற சர்வ மகா ஆதி நாகினியை வரவழைத்தார். நான்கு நாகினிகளும் சிவபெருமான் அருளைால் நாகமணியைப் பெற்று தேவ்வை உயிர்ப்பிக்கும் நோக்கில் தாண்டவமாடினார். பிறகு நாகேஸ்வரி பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு நிகழந்த தன் கதையை விவரிக்கிறார். பருவம் 5பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கழுகுகளுக்கு விரும்பிய உருவமெடுக்கும் இச்சாதாரி சக்தி இருந்தபோது இக்கதை தொடங்குகிறது. நாகமணியைப் பெறுவதற்காக கழுகுகள் பாம்புகளைத் தாக்கியபோது, சிவபெருமான் பாம்புகளுக்கு இச்சாதாரி சக்தியை வழங்கி ஆசீர்வதித்து, இந்த சக்தியைப் பெற்ற முதல் நாகினுக்கு நாகேஸ்வரி என்று பெயரிட்டார். அவள் ஹிருதய் என்ற நாகனைக் காதலிக்கிறாள், இதற்கிடையில் ஆகேஷ் என்ற கழுகு இளவரசன் பவானியை காதலித்தான். இதனால் ஆகேஷ் தனது கழுகுப் படையுடன் வந்து ஹிருதய்யைக் கொன்றார், பிறகு நாகேஸ்வரி கோவத்துடன் ஆகேஷைக் கொன்றார். தன் காதலனுடன் ஒன்றுசேரும் நோக்கில் பவானி தன்னைத்தானே மாய்த்துக் கொண்டார். 40 ஆண்டுகளுக்குப் பிறகு. நாகேஸ்வரி பவானி என்ற பெண்ணாக மறுபிறவி எடுத்தார். அவர் தன் முற்பிறவியின் காதலன் ஹிருத்தயின் மறுபிறவியான ஜனாவை சந்திக்கிறார், அவர்கள் இருவரும் தங்களிடையே ஒரு தொடர்பை உணர்ந்தனர். இதற்கிடையில் வீர் என்ற கழுகு மனிதன், பவானி மேல் ஈர்ப்பு கொண்டாலும் அவளை வெறுத்தான். வீர் பவானியை வலுக்கட்டாயமாக திருமணம் செய்கிறான். பவானி எதிர்பாராத விதமாக வீரின் தோற்றத்தைக் கொண்ட அவனது சகோதரன் தீர் என்பவனைக் கொன்றுவிடுகிறார். பவானியின் அதிகாரங்களைப் பெறுவதற்கு ஜனா அவளைப் பயன்படுத்த முயற்சிக்கிறான் என்பதைக் கண்டுபிடித்து, தனது முற்பிறவியின் காதல் இப்பிறவியில் தனக்கு எதிரி என்பதை உணர்ந்து அதிர்ச்சியடைகிறாள். பிறகு பவானி-வீர் இணைக்கு ஒரு ஆதி காட்டேரி மகனாகப் பிறக்கிறான் (வந்தது நீயா தொடரின் கதாநாயகன்). இயற்கையின் விதியை மீறியதற்கு தண்டனையாக விண்கல்லால் தாக்கப்பட்டு பவானி-வீர் இருவரும் உயிரிழந்தனர். புதிதாகப் பிறந்த குழந்தையைக் கொன்று சக்திகளைப் பெற நினைத்த ஜனாவும் கொல்லப்பட்டார். பருவம் 6ஓர் உயிரியல் போரைத் தொடங்க அண்டை நாட்டிற்கு இந்தியாவின் தேசத்துரோகிகள் உதவுகிறார்கள், அதன்படி நீர்நிலைகளில் ஒரு நஞ்சு நீர்மத்தை வெளியிட்டு தொற்றுநோயை ஏற்படுத்துகின்றனர். தன் நாட்டின் எதிரிகளை வேட்டையாடவும், மக்களின் உயிரைக் காப்பாற்றுவதற்கான மாற்று மருந்தைக் கண்டறியவும் ஒரு பேராசிரியர், சேஷ நாகினியின் உதவியை நாடுகிறார். குஜ்ரால் குடும்ப சகோதரர்களான ரிஷப் மற்றும் ரித்தேஷ் ஆகியோரின் திருமண ஏற்பாட்டுக்காக சாரதா என்ற ஏழைப்பெண் வேலைக்குச் சேர்கிறார். இதற்கிடையே ரிஷப்பின் பாதுகாவலராக சேஷ நாகினியும் அதே வீட்டில் வேலைக்குச் சேர்கிறார். ரித்தேஷ் சாரதாவை காதலிக்கத் தொடங்கினார். பல்வேறு வாதங்களுக்குப் பிறகு இறுதியாக அவர் ரியாவுடனான தனது திருமணத்தை முறித்துக் கொள்வதாக அறிவித்தார். பிறகு ரித்தேஷ்சை மணந்து கொள்ள சாரதா மணமகளாகத் தயாரானார். இதற்கிடையே சாரதா, சர்வ மகா சேஷ நாகினி என்றும் சேஷ நாகினியின் தங்கை என்றும் தெரியவருகிறது. அக்கா-தங்கையான இரு நாகினிகளும் சேர்ந்து ரிஷப்பின் தந்தையும் தேசத்துரோகியுமான லலித்தையும் பிறகு கடாரியா என்ற தேசத்துரோகியையும் கொன்று பழிவாங்கினர். சாரதாவின் நடவடிக்கைகளில் தொடக்கம் முதலே சந்தேகமடைந்த ரிஷப், மணக்கோலத்தில் முகத்தை மறைத்து ரித்தேஷின் இடத்தில் மணவறையில் அமர்ந்து சாரதாவை திருமணம் செய்கிறார். கதாபாத்திரங்கள்முன்னணி கதாபாத்திரங்கள்பருவம் 1
பருவம் 2
பருவம் 3
பருவம் 4
பருவம் 5
பருவம் 6
தமிழில்
* இலங்கையில் உள்ள சக்தி தொலைக்காட்சியில் 'நீயா' என்ற பெயரில் மொழிமாற்றம் செய்யப்பட்டு சனி மற்றும் ஞாயிறு ஆகிய கிழமைகளில் இரவு 7 மணிக்கு ஒளிபரப்பானது.
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia