நாக்ரோட்டா நகரம்
நாக்ரோட்டா (Nagrota) இந்தியாவின் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் ஜம்மு மாவட்டத்தில் அமைந்த இந்திய இராணுவத்தினர் குடும்பங்கள் கொண்ட பாசறை நகரம் ஆகும். இந்நகரம் ஜம்மு - உதம்பூர் இ டையே செல்லும் தேசிய நெடுஞ்சாலை எண் 1 ஏ-இல் உள்ளது. நாக்ரோட்டாவிலிருந்து ஜம்மு 20 கி.மீ. தொலைவிலும், உதம்பூர் 53 கி.மீ. தொலைவிலும், வைஷ்ணவ தேவி மலைக்கோயில் 130 கி.மீ. தொலைவிலும் உள்ளது. இந்நகரத்தில் இராணுவக் குடியிருப்பும், சைனிக் பள்ளியும் உள்ளது. இந்நகரம் நாக்ரோட்டா சட்டமன்றத் தொகுதியில் உள்ளது. மக்கள்தொகை பரம்பல்2011-ஆம் ஆண்டின் மக்கள்தொகை கணக்கெடுப்பின் படி, நாக்ரோட்டா நகரத்தின் மொத்த மக்கள்தொகை 13,836 ஆகும். இதில் ஆண்கள் 9,020 ஆகவும்; பெண்கள் 4,816 ஆகவும் உள்ளனர். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 534 பெண்கள் வீதம் உள்ளனர். எழுத்தறிவு 90.70% உள்ளது. மக்கள்தொகையில் இந்துக்கள் 89.30%, இசுலாமியர் 5.31%, சீக்கியர் 4.39%, கிறித்தவர் 0.60% மற்றவர்கள் 0.40% ஆகவுள்ளனர்.[1] இராணுவக் குடியிருப்புஇந்திய இராணுவத்தின் 16வது படையணியின் மிகப்பெரிய குடியிருப்பு இந்நகரத்தில் உள்ளது.[2] 2016 நாக்ரோட்டா தாக்குதல்29 நவம்பர் 2016 அன்று காலை 5.30 மணி அளவில் நாக்ரோட்டா இராணுவ குடியிருப்பை, பாகிஸ்தானை மையமாகக் கொண்ட லஷ்கர்-ஏ-தொய்பா அமைப்பின் 6 பயங்கரவாதிகள் இரு குழுவாக பிரிந்து தாக்குதல் நடத்தினர். இந்திய இராணுவத்தினர் நடத்திய எதிர்தாக்குதலில் 6 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். இராணுவத்தினர் தரப்பில் ஏழு பேர் உயிர்த்தியாகம் செய்தனர்.[3] மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia