நாக தோசம்

நாக தோச நிவர்த்திக்காக பிரதிஷ்டை செய்யப்பட்ட நாகர்கள்

நாக தோசம் என்பது இந்து சமய மக்களின் நம்பிக்கையின் அடிப்படையில் நாம் புணர்ஜென்மத்திலோ அல்லது நடப்பு காலத்திலோ தெறிந்தோ தெறியாமலோ நாகங்களுக்கு கேடு விளைவித்து அதனால் பெற்ற சாபமாகும். ஒருவரின் ஜாதகத்தில், இராகு மற்றும் கேதுவின் அமைவிடத்தைப் பொறுத்து கால சர்ப்ப தோசம் உள்ளாதா என்பதை அறியலாம். நாக தோசத்திற்கு ஆளானோர், திருக்காளாத்தி, திருநாகேசுவரம் போன்ற இடங்களில் உள்ள சிவன் கோயில்களுக்குச் சென்று நாக வழிபாடு செய்வர்.

நாக தோசம் வலுவாய் இருக்கும் குழந்தைகளுக்கு நாகத்தின் வடிவில் மச்சம் இருக்குமெனவும், அந்த மச்சமிருக்கும் இடத்திற்கு தக்கவாறு பலன் கிடைக்கும் எனவும் நம்பிக்கையுள்ளது. [1]

நாகத்தோசம் அறிகுறிகள்

  • பொதுவாக நாகத்தோசம் சாதகத்தில் பெற்றவர்களுக்கு பெரியளவில் ஏதும் பாதிப்பு இல்லை.
  • ஆனால் கால சர்ப நாகத்தோசம் (Block Cobura) என்பது முன் ஜென்மத்திலோ அல்லது நடைமுறை காலத்திலோ நாம் தெறிந்தோ தெறியாமலோ நாகத்தின் உயிர் பலி வாங்கினால் அவர்களுக்கு ஆயுட்காலம் முழுவதுமான தீராத வயிறு வலி அல்லது இடுப்பு வலி சம்பந்தப்பட்ட நோய்கள் வரும் என்று அறிகுறிகள் உள்ளது.
  • மேலும் இந்த கடுமையான கால சர்ப நாகத்தோசம் உள்ளவர்கள் சாதகத்தில் அதே நாகத்தோசம் பெற்றவர்களை திருமணம் செய்ய வேண்டும்.
  • அவ்வாறு இல்லாவிடில் பசியேடுத்த வயிற்றிற்கு பழம் செல்லாமல் வெளிவயிற்றிலே பழம் பட்டு துள்ளி கீழே விழுந்து சிதறினால் யாருக்கும் பலனில்லாததை போல் வாழ்க்கை ஆகிவிடும் என்பார்கள்.

பரிகாரங்கள்

மேற்கோள்களும் குறிப்புகளும்

  1. http://tamil.webdunia.com/religion/astrology/traditionalknowledge/0804/09/1080409021_1.htm நாக தோஷம் என்றால்... ஜோதிட ரத்னா முனைவர் க.ப. வித்யாதரன்
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya