நாராயணசாமி சீனிவாசன்
நா. சீனிவாசன் என்கிற நாராயணசாமி ஸ்ரீநிவாசன் (Narayanaswami Srinivasan, பிறப்பு: சனவரி,3 ,1945)[3] ஓர் இந்திய தொழிலதிபரும் தற்போதைய பன்னாட்டுத் துடுப்பாட்ட அவையின் (ஐசிசி) தலைவரும் ஆவார். தென்னிந்தியாவிலேயே மிகுதியான அளவில் சிமெண்ட் தயாரிக்கும் நிறுவனம் இந்தியா சிமெண்ட்ஸ். இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தை நிறுவியவர் இவரது தந்தையும் பிரபல தொழிலதிபருமான டி.எஸ்.நாராயணசாமி. சங்கர் சிமெண்ட், கோரமண்டல் சிமெண்ட், ராசி சிமெண்ட் என்ற வர்த்தகப் பெயர்களில் இந் நிறுவனத்தின் சிமெண்ட் விற்பனை ஆகிறது. இந்த இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் மேலாண் இயக்குநராகப் பொறுப்பாற்றுகிறார். ஐசிசியின் தலைவராவப் பொறுப்பேற்பதற்கு முன்னர் பிசிசிஐ-ன் தலைவராகவும், தமிழ்நாடு துடுப்பாட்ட வாரியத்தின் தலைவராகவும் பொறுப்பிலிருந்தார். இளமையும் கல்வியும்சீனிவாசன் தமிழ்நாட்டின் திருநெல்வேலி மாவட்டம் கல்லிடைக்குறிச்சியில் பிறந்தார்.[4] இவரது தந்தை இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் முதல் ஊழியர்களில் ஒருவரான டி.எஸ்.நாராயணசாமியின் ஆவார். சீனிவாசன் தனது பள்ளிப்படிப்பை மெட்ராஸ் கிறிஸ்டியன் கல்லூரி மேல்நிலைப் பள்ளியில் பயின்றார்.[5] சென்னை லயோலா கல்லூரியில் இளங்கலை அறிவியல் பட்டமும், அமெரிக்காவின் சிகாகோவில் உள்ள இல்லினாய்ஸ் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜியில் வேதியியல் பொறியியலில் முதுகலை அறிவியல் பட்டமும் பெற்றுள்ளார்.[6] வகித்த பதவிகள
மேற்சான்றுகள்
|
Portal di Ensiklopedia Dunia