கல்லிடைக்குறிச்சி
கல்லிடைக்குறிச்சி (ஆங்கிலம்:Kalladaikurichi), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் வட்டத்தில், தாமிரபரணி ஆற்றின் கரையில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். இவ்வூரில் பிற்கால பாண்டிய மன்னர் சடையவர்மன் அதிவீரராம பாண்டியன் கட்டிய 500 ஆண்டுகள் பழமையான குலசேகரமுடையார் கோயில் உள்ளது. இங்கு அப்பளம் பிரபலமானது. அமைவிடம்மாவட்டத் தலைமையிட நகரமான திருநெல்வேலியிலிருந்து 40 கி.மீ. தொலைவில் அமைந்த கல்லிடைக்குறிச்சிப் பேரூராட்சியின் வடக்கில் தென்காசி 40 கி.மீ. தொலைவில் உள்ளது. இப்பேரூராட்சியில் திருநெல்வேலி - செங்கோட்டை செல்வதற்கான, கல்லிடைக்குறிச்சி தொடருந்து நிலையம் உள்ளது.[3] பேரூராட்சியின் அமைப்பு6.56 சகி.மீ. பரப்பும், 21 வார்டுகளும், 93 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி அம்பாசமுத்திரம் (சட்டமன்றத் தொகுதி)க்கும், திருநெல்வேலி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[4] மக்கள் தொகை பரம்பல்2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 7708 வீடுகளும், 27,816 மக்கள்தொகையும் கொண்டது.[5] கோயில்கள்
மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia