நாராயணி மண்டலம்![]() நாராயணி மண்டலம் (Narayani Zone) (நேபாளி: नारायणी अञ्चलⓘ) தெற்காசியாவின் நேபாள நாட்டின் பதினான்கு மண்டலங்களில் ஒன்றாகும். இம்மண்டலம் மத்திய வளர்ச்சி பிராந்தியத்தில் உள்ளது. இம்மண்டலத்தின் மேற்கே பாயும் நாராயணி ஆற்றின் பெயரால், இம்மண்டலத்திற்கு நாராயணி மண்டலம் எனப் பெயராயிற்று. இம்மண்டலத்தில் ஐந்து மாவட்டங்கள் உள்ளது. சித்வான் தேசியப் பூங்கா இம்மண்டலத்தில் உள்ளது. புவியியல்நாராயணி மண்டலத்தின் தராய் சமவெளிகளின் வெளிப் பகுதிகளில் பாரா மாவட்டம், பர்சா மாவட்டம், ரவுதஹட் மாவட்டங்களும், தராய் சமவெளியின் உட்பகுதியில் சித்வன் மாவட்டம் மற்றும் மக்வான்பூர் மாவட்டங்களும் அமைந்துள்ளது. நாராயணி மண்டலத்தின் தெற்கே தராய் சமவெளிகளும், வடக்கே மலைப்பாங்கான குன்றுப் பகுதிகளும் உள்ளது. இம்மண்டலத்தில் இமயமலைப் பகுதிகள் இல்லை. நாராயணி ஆறு மற்றும் ரப்தி ஆறு இம்மண்டலத்தின் முக்கிய ஆறுகள். விஷாரரி மற்றும் கருடா ஏரிகள் உள்ளது. இதன் தெற்கே இந்தியா எல்லையாக அமைந்துள்ளது. தட்ப வெப்பம்நாராயணி மண்டலம் கடல் மட்டத்திலிருந்து நூற்றி அறுபது மீட்டர் முதல் ஆயிரம் மீட்டர் உயரம் வரை பரவியுள்ளது. எனவே இம்மண்டலத்தின் தட்ப வெப்பம் கீழ் வெப்ப மண்டலம், மேல் வெப்ப மண்டலம், மிதவெப்ப வளையம் என மூன்று நிலைகளில் காணப்படுகிறது. [1] நகரங்கள் மற்றும் ஊர்கள்பீர்கஞ்ச், பர்வானிபூர், ஜித்பூர், ஆலௌ, ஹெடௌதா, பரத்பூர், நாராயணன்காத், கலையா மற்றும் கௌர் இம்மண்டலத்தின் முக்கிய நகரங்களும், ஊர்களும் ஆகும். பிற தகவல்கள்ஆசியாவில் வளமை மிக்க, 932 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட சித்வான் மாவட்டத்தின் சித்வான் தேசியப் பூங்கா உலகப் பாரம்பரியக் களங்களில் ஒன்றாக யுனெஸ்கோ நிறுவனத்தால் தேர்த்தெடுக்கப்பட்டுள்ளது. சித்வான் தேசியப் பூங்காவில் வங்காளப் புலிகள் மற்றும் இந்தியக் காண்டாமிருகங்களைக் கொண்டுள்ளது. சித்வான் தேசியப் பூங்காவின் தென்கிழக்கில் 499 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் பர்சா காட்டுயிர் காப்பகம் செயல்படுகிறது. நெல், கோதுமை, சோளம் பயிரிடுதலே இம்மண்டலத்தின் முக்கிய வேளாண்மைத் தொழில் ஆகும். மக்கள் தொகையியில்2011-ஆம் ஆண்டி மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, நாராயணி மண்டலத்தின் மக்கள் தொகை 29,75,908 ஆகும். [2][3] இம்மண்டலத்தில் நேபாள மொழி, போஜ்புரி மொழி, மைதிலி மொழி, இந்தி மொழி, பஜ்ஜிகா மொழி, உருது மொழி மற்றும் பிற மொழிகள் பேசப்படுகிறது. இதனையும் காண்கமேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia