நா. புகழேந்தி
நா. புகழேந்தி (N. Pugazhenthi, இறப்பு: 6 ஏப்ரல் 2024)[1] என்பவர் ஓர் இந்திய அரசியல்வாதியாகவும் தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். விழுப்புரம் மாவட்டம் சங்கராபுரம், அத்தியூர் திருவாதித்தினைச் சார்ந்த புகழேந்தி உளுந்தூர்பேட்டை அரசுப் பள்ளியில் பள்ளிக் கல்வியினைக் கற்றுள்ளார்.[2] திராவிட முன்னேற்றக் கழகத்தினைச் சார்ந்த புகழேந்தி விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதியில் 2019ஆம் ஆண்டு நடைபெற்ற இடைத்தேர்தலில் தோல்வியுற்றார்.[3] பின்னர் 2021ஆம் ஆண்டு மே மாதம் நடைபெற்ற தேர்தலில் சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[4] புகழேந்தி விழுப்புரம் மத்திய மாவட்ட, திமுக மாவட்டச் செயலாளராகவும் உள்ளார்.[5] தேர்தல்களில் போட்டி
குடும்பம்புகழேந்தியின் மனைவி கிருஷ்ணம்மாள் ஆவார். இந்த இணையருக்கு செல்வகுமார் என்ற மகனும். செல்வி, சாந்தி, சுமதி என்ற மகள்களும் உள்ளனர். இறப்பு71 வயதான புகழேந்தி உடல்நலக் குறைவால் 6 ஏப்ரல் 2024 அன்று காலமானர்.[6] மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia