நா. ப. இராமசாமி நூலகம்

நா. ப. இராமசாமி நூல்களின் ஒரு பகுதியுடன்

நா. ப. இராமசாமி நூலகம் நாமக்கல்லில் உள்ள ஒரு தமிழ் நூலகம் ஆகும். நா. ப. இராமசாமி அவர்களின் முயற்சியால் சுமார் 30 000 மேற்பட்ட நூல்களையும் ஆவணங்களையும் இது கொண்டுள்ளது.

நூல் வகைகள்

இராமலிங்க அடிகளாரின் முதல் பதிப்பு நூல்கள், மணிமேகலை, பத்துப்பாட்டு முதல்பதிப்பு, திருக்குறள் 1840 பதிப்பு, இராட்லர் அகராதி(1834,36,39,41), சுவிசர்லாந்து பற்றி 1836 இல் வெளிவந்த நூல்கள் உள்ளன. இதில் படங்கள் கையால் வரையப்பட்டுள்ளன. கால்டுவெல் திராவிடமொழிகளின் ஒப்பிலக்கணம் இரண்டாம் பதிப்பு(1875), 1803 இல் வெளியான சேக்சுபியர் நூல்கள் (ஐந்து தொகுப்புகள்). இவை தவிர ஓவியம்,சிற்பம், மருத்துவம், மூலிகை, சமையல்கலை(1912) குறித்த நூல்கள் உள்ளன.

ஆப்பிரிக்கா பற்றி 1858 இல் தமிழில் எழுதப்பட்ட நூல் உள்ளது. ஆப்பிரிக்கா நாடு கண்டுபிடிக்கப்பட்டது பற்றிய பல தகவல்கள் இதில் உள்ளன. பாளையங்கோட்டையில் இந்த நூல் அச்சிடப்பட்டுள்ளது.

வெளி இணைப்புகள்

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya