நிகிதா லால்வானிநிகிதா லால்வானி (Nikita Lalwani) இராசத்தானின் கோட்டாவில் பிறந்து வேல்ஸின் கார்டிப்பில் வளர்ந்த ஒரு நாவலாசிரியர்.[1] இவருடைய படைப்புகள் பதினாறு மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. தொழில்நிகிதா பிரிஸ்டல் பல்கலைக்கழகத்தில் ஆங்கிலம் பயின்றார்.[2] இவரது முதல் புத்தகம், கிப்டெட் (Gifted -2007), மேன் புக்கர் பரிசுக்காகப் பட்டியலிடப்பட்டது.[3] இவரது முதல் நாவலும் கோசுடா புக் விருதுக்கான பட்டியலிடப்பட்டது. லால்வானி சண்டே டைம்சு ஆண்டின் இளம் எழுத்தாளராகப் பரிந்துரைக்கப்பட்டார்.[4] சூன் 2008-இல், டெசுமண்ட் எலியட் பரிசை முதலில் வென்ற பெருமையுடையவர்.[5] இவர் பரிசுத் தொகையான £10,000த்தை மனித உரிமைகளுக்காகப் போராடும் இலாப நோக்கமற்ற அமைப்பான இலிபர்ட்டிக்கு நன்கொடையாக வழங்கினார்.[6] லால்வானியின் இரண்டாவது புத்தகமான தி வில்லேஜ் 2012-இல் வெளியிடப்பட்டது.[7] மேலும் 2013-இல் புனைகதை வெளிப்படுத்தப்படாத பரிசுக்கான எட்டுப் புத்தகங்களில் ஒன்றாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது [8] லால்வானி தி கார்டியன், நியூ ஸ்டேட்ஸ்மேன், தி அப்சர்வர் பத்திரிக்கைகளில் பங்களித்துள்ளார். இந்தியாவில் எச்ஐவி/எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்களின் வாழ்க்கையை ஆராயும் எய்ட்ஸ் சூத்ரா,[9] எனும் தொகுப்பினையும் எழுதியுள்ளார்.[8] 2013-இல், ஆர்வெல் பரிசுக்கு லால்வானி புத்தகப் பரிசுத் தேர்வில் நடுவராக இருந்தார்.[10] 2018-இல், லால்வானி இலக்கிய அரச சமூக அமைப்பின் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[8] பின்னர் 2019-இல் இச்சமூகத்தின் என்கோர் விருது தேர்வில் நடுவராக இருந்தார். இதே ஆண்டில், ரெசிஸ்ட்: ஸ்டோரிஸ் ஆஃப் அப்ரைசிங் என்ற தொகுப்பினை எழுதினார்.[11] இவரது நாவலான யூ பீப்பிள், மேற்கு லண்டன் பிஸ்ஸேரியாவில் பெரும்பாலான ஊழியர்கள் சட்டவிரோதமாகக் குடியேறியவர்கள் குறித்தது. இது 2020-இல் பென்குயின் வெளியீட்டு நிறுவனத்தால் வெளியிடப்பட்டது. 2021-இல் மெக்சுவீணீ ஐக்கிய அமெரிக்காவினால் வெளியிடப்பட்டது. [12] லால்வானி பிபிசி ஒன்/அமேசான் ஸ்டுடியோஸ் தொடரான தி அவுட்லாசின் மூன்று அத்தியாயங்களை வழங்கினார். இதில் இரண்டு இசுடீபன் மெர்ச்சண்டுடனும் மற்றொன்று ஜெஸ் பிரேயுடன் இணைந்து எழுதப்பட்டது.[13] புத்தகங்கள்
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia