நிணநீர் பைலேரியாசிசு
![]() ![]() யானைக்கால் நோய் (Elephantiasis) தோலும், அதன் கீழே உள்ள திசுக்களும், குறிப்பாக கால்களும், ஆண் இனப்பெருக்க உறுப்பும் மிகவும் தடிப்பாகிவிடும் ஒரு நோயாகும். சில நோயாளிகளில் இந்நோயானது, சில உடல் உறுப்புகளை (உதாரணமாக, விரைப்பை) கூடைப்பந்து அளவிற்கு ஊதிப் பெருக்கச் செய்துவிடும்[1]. இது ஃபைலேரியா (Filaria) என்னும் நுண்புழுவாலும், ஃபைலேரியா போன்ற ஒட்டுண்ணிகள் இல்லாமலும் ஏற்படும் நோயாகும்[2]. இந்நோய், இழை (நூல்) போன்ற நுண்ணிய ஒட்டுண்ணிப் புழுக்கள் கொசுக்களால் பரவுவதன் மூலம் மனிதர்களுக்கு ஏற்படுகிறது[3]. இது காலைத் தவிர பிற பகுதிகளையும் கூடக் தாக்கும். ஆனால் பெரும்பாலும் நிணநீர் மண்டலத்தின் (lymphatic system) வழியே காலைத் தாக்குவதால் கால் ஊதிப்பெருத்து யானையின் கால் போல் தோற்றம் தருவதால் யானைக்கால் நோய் எனப் பெயர் பெற்றது. இந்தியாவில் கியுலக்ஸ் என்ற வகையான கொசுக்கள் கடிப்பதால் யானைக்கால் நோய் பரவுகிறது. தொற்றுநோயியல்![]() தரவு இல்லை 10க்கு கீழ் 10–50 50–70 70–80 80–90 90–100 100–150 150–200 200–300 300–400 400–500 500க்கு மேல் ஆப்பிரிக்கா, ஆசியா, மத்திய அமெரிக்கா, கரீபியன் மற்றும் தென் அமெரிக்கா மற்றும் சில பசிபிக் தீவு நாடுகளில் வெப்பமண்டல மற்றும் மிதவெப்ப மண்டல பகுதிகளில் நிணநீர் பைலேரியாசிசு அதிக அளவில் காணப்படுகிறது. நிணநீர் பைலேரியாசிசால் ஏற்படும் யானைக்கால் நோய் உலகில் நிரந்தர இயலாமைக்கான பொதுவான காரணங்களில் ஒன்றாகும்.[4] 2018ஆம் ஆண்டு நிலவரப்படி, 51 மில்லியன் மக்கள் நிணநீர் பைலேரியாசிசினால் பாதிக்கப்பட்டுள்ளனர். 50 நாடுகளில் குறைந்தது 863 மில்லியன் மக்கள் தொற்று பரவுவதைத் தடுக்க தடுப்பு வேதிச்சிகிச்சை தேவைப்படும் பகுதிகளில் வாழ்கின்றனர். 2022ஆம் ஆண்டளவில், பாதிப்பு 40 மில்லியனாகக் குறைந்துள்ளது, மேலும் இந்த நோய் 47 நாடுகளில் காணப்படுகிறது. தற்பொழுது நோய்த் தொற்று குறைந்ததற்கன காரணமாக நிணநீர் பைலேரியாசிசை அகற்றுவதற்கான உலக சுகாதார நிறுவனத்தின் உலகளாவிய நேரடித் திட்டத்தின் பயன்பாடாகும்.[5] உலகம் முழுவதிலும் 90% நிணநீர் பைலேரியாசிசு ஏற்படக் காரணமாக வூ. பான்கிராப்டி உள்ளது. ப்ரூஜியா மலாய் எஞ்சிய பெரும்பாலான நிகழ்வுகளை ஏற்படுத்துகிறது. ப்ரூஜியா திமோரி அரிய காரணியாக உள்ளது.[5] பரந்த பூமத்திய ரேகை பகுதியான (ஆப்பிரிக்கா, நைல் வடிநிலம், துருக்கி, இந்தியா, கிழக்கிந்திய தீவுகள், தென்கிழக்கு ஆசியா, பிலிப்பீன்சு, பெருங்கடல் தீவுகள் மற்றும் தென் அமெரிக்காவின் சில பகுதிகள்) முழுவதும் உள்ள பகுதிகளை வூ. பான்கிராப்டி பெரிதும் பாதிக்கிறது. வூ. பான்கிராப்டி கடத்தியான கொசு மனித இரத்தத்தை விரும்பி உறிஞ்சுகின்றன. இயற்கையாகவே மனிதர்களைத் தவிர வேறு எந்த விலங்குகளையும் விருந்தோம்பியாக வூ. பான்கிராப்டி விரும்புவதாகத் தெரியவில்லை.[6] போடோகோனியோசிசு பாதிப்பு உள்ள பகுதிகளில், பாதிப்பு 5% அல்லது அதற்கும் அதிகமாக இருக்கலாம். நிணநீர் பைலேரியாசிசு பரவக்கூடிய சமூகங்களில், 10% பெண்கள் வீங்கிய மூட்டுகளால் பாதிக்கப்படலாம், மேலும் 50% ஆண்கள் பிறப்புறுப்புகளை சிதைக்கும் அறிகுறிகளை கொண்டிருக்கலாம்[7]. நோயின் அறிகுறிகள்கியுலக்ஸ் என்ற வகையான கொசுக்கள் கடிப்பதால் இந்நோய் வருகிறது. இந்த நோய் இருப்பவர்களுக்கு இரவு நேரங்களில் மட்டும் காய்ச்சல் அடிக்கும், நெறிகட்டுதல், கால்வீக்கம், விறைவீக்கம் போன்றவை இந்நோயின் அறிகுறிகளாகும். யானைக்கால் நோய் வந்தவர்களின் கால் யானையின் காலைப்போல் வீங்கிவிடும். நடக்க கடினமாகும். காலை மடக்கி உட்கார முடியாது எனப் பல தொந்தரவுகளை எதிர்கொள்ள வேண்டி வரும். தடுப்பு மருந்துகள்டி.இ.சி மற்றும் அல்பென்டோசெல் என்ற இந்த இரண்டு மாத்திரைகளை உட்கொண்டால் இந்த நோய் வராமல் காத்துக்கொள்ள முடியும். மாத்திரைகள் உட்கொள்ளும் முறைடி.இ.சி என்ற மாத்திரை குழந்தைகளுக்கு ஒன்று, அல்பெண்டாசோல் என்ற மாத்திரை ஒன்று, 6 முதல் 14 வயது உள்ளவர்களுக்கு இரண்டு ஒன்று என்ற கணக்கிலும், 15 முதல் 60 வயது வரையிலானவர்களுக்கு மூன்று, ஒன்று என்ற கணக்கில் உட்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது. இந்த மாத்திரைகளை உட்கொள்வதன் மூலம் உடலில் யானைக்கால் நோயை உற்பத்தியாக்கும் வைரஸசான மைக்ரோ ஃபைலேரியா என்ற வைரஸ் கிருமி அழிக்கப்படுகிறது. ஒரே நேரத்தில் இம்மாத்திரைகளை உட்கொள்வதன் மூலம் இந்நோய் பரவுவது தடை செய்யப்படுகிறது. உணவுக்கு பின் இந்த மாத்திரைகளை உட்கொள்ள வேண்டும். இந்த மாத்திரை உட்கொண்டபின் காய்ச்சல் வந்தால் அவர்களது உடலில் அந்த நோய் கிருமிகள் உள்ளது என்பது பொருள். இதற்காக உடனடியாக சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும். இரண்டு வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு இம்மாத்திரைகள் வழங்ககூடாது. மேற்கோள்கள்
வெளியிணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia