நியோடிமியம்(III) ஐதராக்சைடு
நியோடிமியம்(III) ஐதராக்சைடு (Neodymium(III) hydroxide) என்பது Nd(OH)3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். தயாரிப்புஅமோனியா நீரில் நியோடிமியம்(III) நைட்ரேட்டை வினைபுரியச் செய்தால் நியோடிமியம்(III) ஐதராக்சைடு உருவாகிறது.[2]
Nd(NO3)3 40கி/லிட்டர் அளவு எடுத்துக் கொண்டால் அமோனியா நீரை 0.50 மோல்/லிட்டர் அளவு எடுத்துக் கொள்ள வேண்டும்; அமோனியா நீரை Nd(NO3)3 கரைசலில் நிமிடத்திற்கு 1.5 மில்லி லிட்டர் என்ற வேகத்தில் இட்டு pH அளவையும் 7.35 என்ற அளவுக்கு கட்டுப்படுத்த வேண்டும்,பல்லெத்திலீன் கிளைக்காலை சிதறலுக்காகப் பயன்படுத்திக் கொள்ளலாம். ≤1μm மணி அளவில் நியோடிமியம்(III) ஐதராக்சைடு தோன்றும்.[3] இயற்பியல் பண்புகள்ரோசா நிறத்தில் திண்மநிலையில் நியோடிமியம்(III) ஐதராக்சைடு காணப்படுகிறது.[1] வேதியியற் பண்புகள்அமிலங்களுடன் வினைபுரிந்து நியோடிமியம்(III) ஐதராக்சைடு நியோடிமியம் உப்புகளை உருவாக்குகிறது.
மேற்கோள்கள் |
Portal di Ensiklopedia Dunia