நியோடிமியம்(III) ஆக்சைடு(Neodymium(III) oxide) என்பது Nd2O3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிம வேதியியல்சேர்மமாகும். நியோடிமியம் செசுகியுவாக்சைடுஎன்ற பெயராலும் அழைக்கப்படும் இச்சேர்மம் நியோடிமியம் மற்றும் ஆக்சிசன் சேர்ந்து உருவாகிறது. வெளிர் சாம்பல்-நீல அறுகோண படிகங்களாக இச்சேர்மம் உருவாகிறது[1]. முன்னதாக ஒரு தனிமம் எனக்கருதப்பட்ட அரிய-மண் கலவையான டிடிமியத்தில் ஒரு பகுதியாக நியோடிமியம்(III) ஆக்சைடு காணப்படுகிறது[2].
பயன்கள்
சூரிய ஒளிக்காப்பு கண்ணாடிகள் உள்ளிட்ட கண்ணாடிகளில் கலக்க மாசாக நியோடிமியம்(III) ஆக்சைடு பயன்படுகிறது. மேலும் திண்மநிலை சீரொளிகள் உருவாக்கவும், வண்ணக்கண்ணாடிகள் தயாரிக்கவும், மிளிர்பூச்சுகள் தயாரிப்பிலும் இதைப்பயன்படுத்துகிறார்கள்[3]. நியோடிமியம் கலக்கப்பட்ட கண்ணாடி மஞ்சள் மற்றும் பச்சை ஒளியை ஈர்த்துக் கொள்வதால் செவ்வூதா நிறத்திற்கு மாறுகிறது. இதனால் பற்றவைப்புக் கண்ணாடிகள் தயாரிப்பில் பயன்படுத்தப்படுகிறது[4]. நியோடிமியக் கலப்பு கண்ணாடிகளில் சில இருநிறங்காட்டிகளாக விளங்குகின்றன. அதாவது ஒளி அமைப்பைப் பொறுத்து இக்கண்ணாடி நிறத்தை மாற்றிக் கொள்கிறது. அலெக்சாண்டரைட்டு என்று பெயரிடப்பட்ட கனிமம் சுரிய ஒளியில் நீலமாகவும் செயற்கை ஒளியில் சிவப்பாகவும் தோன்றுகிறது[5]. உலகம் முழுவதும் ஒவ்வோர் ஆண்டும் கிட்டத்தட்ட 7000 டன்கள் நியோடிமியம்(III) ஆக்சைடு உற்பத்தி செய்யப்படுகிறது. பலபடியாக்கல் வினையூக்கியாகவும் நியோடிமியம்(III) ஆக்சைடைப் பயன்படுத்துகிறார்கள்[4].
வினைகள்
நியோடிமியம்(III) ஆக்சைடை நியோடிமியம்(III) நைட்ரைடு அல்லது நியோடிமியம்(III) ஐதராக்சைடு சேர்மத்தை காற்றில் எரித்துத் தயாரிக்கிறார்கள்[6].
மேற்கோள்கள்
↑ 1.01.11.2
Lide, David R. (1998), Handbook of Chemistry and Physics (87 ed.), Boca Raton, FL: CRC Press, pp. 471, 552, ISBN0-8493-0594-2
↑
Brady, George Stuart; Clauser, Henry R.; Vaccari, John A. (2002), Materials Handbook (15 ed.), New York: McGraw-Hill Professional, p. 779, ISBN978-0-07-136076-0, retrieved 2009-03-18