நிர்மா

நிர்மா
வகைதனியார் நிறுவனம்
நிறுவுகை1990
தலைமையகம்அகமதாபாத், குசராத்து, இந்தியா
சேவை வழங்கும் பகுதிஇந்தியா
முதன்மை நபர்கள்கர்சன்பாய் படேல் (தலைமை நிர்வாக இயக்குநர்)
தொழில்துறைஅதிவேகமாக நுகரும் நுகர்வோர் பொருட்கள்
உற்பத்திகள்நுவோகோ சீமைக்காரைகள், ஜீரோ எம் வால் புட்டி, நிர்மா சவர்க்காரம், நிர்மா சோப்புகள்
இணையத்தளம்www.nirma.co.in

நிர்மா (Nirma) என்பது இந்தியாவின் குசராத்தில் உள்ள அகமதாபாத் நகரத்தை தளமாகக் கொண்ட ஒரு குழு ஆகும். இது சீமைக்காரைகள், அழகுசாதனப் பொருட்கள், சவர்க்காரம், உப்பு, சோடா சாம்பல், ஆய்வக மற்றும் ஊசி மருந்துகள் போன்ற தயாரிப்புகளை உற்பத்தி செய்கிறது. குசராத்தின் தொழில்முனைவோரும் மற்றும் தொண்டு செய்பவருமான கர்சன்பாய் படேல், நிர்மாவை ஒரு தன்னந்தனி மனிதராக இந்த நடவடிக்கையாகத் தொடங்கினார். இன்று நிர்மாவில் 25,000க்கும் மேற்பட்ட ஊழியர்கள் உள்ளனர். மேலும் ரூபாய் 20,500 கோடிக்கு மேல் விற்றுகொள்முதல் வருவாய் உள்ளது

கண்ணோட்டம்

1969 ஆம் ஆண்டில் 100 சதுர அடி (9.3 மீ 2) அறையிலிருந்து ஒரு பொருள் தயாரிப்பு, ஒரு தன்னந்தனி மனிதர் வணிகமாகத் தொடங்கி, நிர்மா மூன்று தசாப்தங்களுக்குள் மிகவும் வெற்றிகரமான நிறுவனமாக மாறியது. இந்நிறுவனம் பல இருப்பிட உற்பத்தி வசதிகளையும், நிர்மா என்ற ஒரு குடையின் கீழ் ஒரு பரந்த தயாரிப்பு இலாகாவையும் கொண்டிருந்தது - .

நிர்மா வெற்றிகரமாக ஹிந்துஸ்தான் யூனிலீவர் நிறுவனத்திடமிருந்து போட்டியை எதிர்கொண்டது. துணி சவர்க்காரம் மற்றும் குளியறை சவர்க்காரச் ந்தையின் கீழ் இறுதியில் தனக்கென ஒரு முக்கிய இடத்தை பெற்றது. எவ்வாறாயினும், உயரடுக்கு முதல் நடுத்தர வர்க்க நுகர்வோர் வரை தக்க வைத்துக் கொள்ள மேலும் சில அதிகப்படியானத் தயாரிப்புகளைத் தொடங்க வேண்டும் என்பதை நிர்மா உணர்ந்தது. நிறுவனம் உயர்நடுத்தரப் பிரிவுக்கு குளியல் சவர்காரத்தை அறிமுகப்படுத்தியது.

2000 ஆம் ஆண்டில், குளியறை சவர்க்காரப் பிரிவில் நிர்மாவுக்கு 15% பங்கும், சவர்க்காரச் சந்தையில் 30% க்கும் அதிகமான பங்கும் கொண்டிருந்தது. தொகுதிகளின் வளர்ச்சி மற்றும் பின்தங்கிய ஒருங்கிணைப்பு திட்டங்களை மூலம், மார்ச் 2000 உடன் முடிவடைந்த ஆண்டிற்கான நிர்மாவின் வருவாய் முந்தைய நிதியாண்டை விட 17% அதிகரித்து 2 1,217 கோடியாக அதிகரித்தது. [சான்று தேவை]

சீமைக்காரை வியாபாரத்தில் நிர்மாவும் "நிர்மாக்ஸ்" என்ற பெயரில் வணிகத்தை மேற்கொள்கிறது.[1]. லாஃபார்ஜ் இந்தியா சீமைக்காரை நிறுவனச் சொத்துக்களை 1.4 பில்லியன் அமெரிக்க டாலருக்கு நிர்மா வாங்கியது.[2] . பிப்ரவரி, 2020 இல் மற்றொரு பெரிய நிறுவனமான இமாமி சீமைக்காரை நிறுவனத்தை நிர்மா வாங்கியது [3]

வரலாறு

1969 ஆம் ஆண்டில், குசராத் அரசாங்கத்தின் சுரங்க மற்றும் புவியியல் துறையின் வேதியியலாளர் முனைவர் கர்சன்பாய் படேல், பாஸ்பேட் இல்லாத செயற்கை சவர்க்காரத் தூளை தயாரித்து, உள்நாட்டில் விற்பனை செய்யத் தொடங்கினார். புதிய மஞ்சள் வண்ணத் தூள் ஒரு கிலோவிற்கு ₹ 3.50 என நிர்ணயிக்கப்பட்டது. ஒரு நேரத்தில் ஹிந்துஸ்தான் யூனிலிவரின் சர்ப் சவர்க்காரத்தூளின் விலை ₹ 13 ஆக இருந்தது. விரைவில், படேலின் சொந்த ஊரான இருப்பூரில் ( குசராத் ) நிர்மாவுக்கு பெரும் தேவை ஏற்பட்டது. இவர் தனது வீட்டில் 10க்கு10 அடி அறையில் உற்பத்தி செய்யத் தொடங்கினார். படேல் தனது மகள் நிருபமாவின் பெயரால் இந்த தூளை நிர்மா என்று பெயரிட்டார். படேல் 15 கி.மீ தூரத்தில் சைக்கிளில் அலுவலகத்திற்கு செல்லும் வழியில் ஒரு நாளைக்கு சுமார் 15 முதல் 20 பாக்கெட்டுகள் வரை விற்க முடிந்தது. 1985 வாக்கில், நிர்மா சலவைத் தூள் நாட்டின் பல பகுதிகளில் மிகவும் பிரபலமான, வீட்டு சவர்க்காரங்களில் ஒன்றாக மாறியது.[4][5]

1999 வாக்கில், நிர்மா ஒரு பெரிய நுகர்வோர் பொருளாக இருந்தது. இது சவர்க்காரம், மற்றும் தனிப்பட்ட பராமரிப்பு தயாரிப்புகளை வழங்குகிறது.[6] மிகவும் போட்டி நிறைந்த சவர்க்காரச் சந்தையில் நிர்மாவின் வெற்றிக்கு அதன் பொருள் ஊக்குவிப்பு முயற்சிகள் காரணமாக இருந்தன. இது அதன் விநியோக வரம்பு மற்றும் சந்தை ஊடுருவலால் பூர்த்தி செய்யப்பட்டது. நிர்மாவின் வலைப்பின்னல் நாடு முழுவதும் சுமார் 400 விநியோகஸ்தர்களும் 20 லட்சத்திற்கும் மேற்பட்ட சில்லறை விற்பனை நிலையங்களையும் கொண்டிருந்தது. இந்த மிகப்பெரிய வலைப்பின்னல் மூலம் நிர்மா தனது தயாரிப்புகளை மிகச்சிறிய கிராமத்திற்கும் கிடைக்கச் செய்தது.

நவம்பர், 2007 இல், நிர்மா அமெரிக்க மூலப்பொருட்கள் தயாரிப்பு நிறுவனமான சியர்லஸ் வேலி மினரல்ஸ் இன்க் என்ற நிறுவனத்தை வாங்கியது. இது உலகின் முதல் ஏழு சோடா சாம்பல் உற்பத்தியாளர்களில் ஒன்றாகத் திகழ்ந்தது .[7]

சவர்க்காரப் பைகளில் பெரும்பாலும் அச்சிடப்பட்ட நிர்மா பெண்ணின் சின்னம் புனேவில் வசிக்கும் திரு கன்வில்கர் என்பவர் வரைந்துள்ளார்.

மேலும் காண்க

  • கர்சன்பாய் படேல்
  • நிர்மா அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகம்

குறிப்புகள்

  1. https://www.zaubacorp.com/trademarks/proprietorid/957641
  2. https://www.thehindu.com/business/Industry/Nirma-to-buy-Lafarge-India-cement-assets-for-1.4-billion/article14483453.ece
  3. https://www.thehindu.com/business/Industry/nirma-to-acquire-emamis-cement-business-for-5500-cr/article30755164.ece
  4. . 23 April 2017. 
  5. . 
  6. "SRIJAN March - 2010". srimca.edu.in. Archived from the original on 2014-08-05. Retrieved 2016-09-03.
  7. "Nirma shares soar 7% on acquisition of US co". தி எகனாமிக் டைம்ஸ். 27 November 2007. http://economictimes.indiatimes.com/stocks_in_news_home/Nirma_shares_soar_7_on_acquisition/articleshow/2574416.cms. 

வெளி இணைப்புகள்

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya