நீங்களும் ஹீரோதான்
நீங்களும் ஹீரோதான் (Neengalum Herothan) 1990 ஆம் ஆண்டு மே மாதம் 25 ஆம் தேதியன்று வெளியான தமிழ்த் திரைப்படம் ஆகும்.[1] இயக்குநர் பாக்யராஜிடம் உதவியாளராக இருந்த வி. சேகர் இப்படத்தை இயக்கினார்.[2] கங்கையமரன் இப்படத்திற்கு இசையமைத்தார்.[3] வகைசமூகத் திரைப்படம், நகைச்சுவைப்படம் கதைகதைச்சுருக்க எச்சரிக்கை: கதைச்சுருக்கம் மற்றும்/அல்லது கதை முடிவு விவரங்கள், கீழே தரப்பட்டுள்ளன. கிராமத்திற்கு வரும் திரைப்படப் படப்பிடிப்புக் குழுவினரும், அந்த கிராமத்துவாசிகளும் சந்திக்கையில் நிகழும் சம்பவங்கள் தான் இப்படத்தின் கதை. சினிமா மோகத்தில் சினிமாவில் சேர்ந்து புகழும் பணமும் பெற நினைக்கும் கிராமத்துக் கலைஞர்களுக்கு உண்மையான சினிமா என்றால் என்ன என்பதைப் புரிய வைக்கும் நகைச்சுவைச் சித்திரம். 'பாவாடைசாமி' என்னும் பெயரில் கவுண்டமணியின் வித்வான் கதாபாத்திரம் எல்லாராலும் ரசிக்கப்பட்ட பாத்திரம். மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia