நீரூற்றுக்கள்எளிமையான அமைப்பில் நீரூற்றுக்கள் என்பன குழாய் வழியாக கொண்டுவரப்படும் நீர் சிறிய துளை அல்லது துளைகள் வழியாக வெளியேறி தொட்டியொன்றுக்குள் விழும். ஆரம்ப காலத்து நீரூற்றுகளில் இவ்வாறு சேரும் நீர் வெளியேறி வடிகாலுக்குள் செல்லும். தற்காலத்தில் ஜெனீவா ஏரியில் உள்ளதுபோல, ஏரிப்பரப்பிலிருந்து மேலெழுந்து செல்லும் பிரம்மாண்டமான நீரூற்றுகள் இருந்தாலும், பல நீரூற்றுகள் சிறிய, செயற்கைக் குளங்களிலும், தொட்டிகளிலும், தோட்டங்களில் காணப்படும் தடாகங்களிலுமே பெரும்பாலும் அமைக்கப்படுகின்றன. சில சந்தர்ப்பங்களில் சிலைகள், சிற்பங்களும் அவற்றுடன் இணைந்திருப்பதுண்டு. அமுக்கத்துடன் குழாய்வழி கொண்டுவரப்படும் நீர், அலங்காரமாக பல்வேறு வடிவங்களில் விசிற விடப்படுதல் இக்காலத்தில் மிகவும் சாதாரணமாகப் பயன்படுத்தப்படும் நுட்பமாகும். இதைவிட கற்கள், கொங்கிறீற்று, உலோகம் போன்ற பல்வேறு மேற்பரப்புகளில், நீர் தகடுபோல் வழிந்து செல்லவிடப்படுவதையும் காணலாம்.[1][2][3] வரலாறு![]() ஆரம்பகால நீரூற்றுகள் புவியீர்ப்பின் கீழான நீரோட்டங்களையே அடிப்படையாகக் கொண்டிருந்தன. இயற்கை நீரூற்றுக்கள் அல்லது செயற்கையான நீர்காவி அமைப்புகள் நீரூற்றுக்களுக்குத் தேவையான நீரினது மூலங்களாக இருந்தன. கிரேக்க மற்றும் ரோமப் பொறியியலாளர்கள் நீரூற்றுகள் அமைப்பதில் நிபுணர்களாக இருந்ததாகக் கூறப்படுகின்றது. ஏனைய ஆரம்பகால நீரூற்றுக்கள் Geometrically ஒழுங்கமைக்கப்பட்ட நீரூற்றுக்கள் வடிவில் பாரசீகத் தோட்டங்களில் வளர்ச்சி பெற்றிருந்தன. 16 ஆம் நூற்றாண்டில், மத்திய இத்தாலியிலும், முகலாய இந்தியாவிலுமிருந்த தோட்டங்களில், நுணுக்கமான வேலப்பாடுகளைக் கொண்ட நீரூற்றுக்கள் சிறப்பிடம் பெற்றிருந்தன. தற்காலத்தில் தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக நீரூற்று அமைப்புகளில் பெருமளவு முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. நீரியல், ஒளியமைப்பு, மின்னணுவியல் ஆகிய துறைகளில் ஏற்பட்ட முன்னேற்றங்களை நீரூற்றுக்களை உருவாக்குவதற்கு இன்றைய வடிவமைப்பாளர்கள் பயன்படுத்துகிறார்கள். நீரூற்று வகைகள்நிலையான நீரூற்றுக்கள்பொதுவாக நீரூற்றுக்கள் எதுவும் இயக்கமின்றி இருப்பதற்காக வடிவமைக்கப் படுவதில்லை. நீரூற்றுக்களில் நீர் மெதுவாக ஓடிக்கொண்டோ, வழிந்து நீர்வீழ்ச்சிபோல விழுந்துகொண்டோ அல்லது அமுக்கத்தின் கீழ் விசிறப்பட்டுக்கொண்டோ இருக்கும். ஆயினும் அதன் இயக்கம் எவ்வித மாற்றமும் இன்றி ஒரேவிதமாகவே எப்பொழுதும் இருக்குமாயின் அது நிலையான நீரூற்றுக்கள் என்று அழைக்கப்படுகின்றன. அசைவியக்க நீரூற்றுக்கள்குறிப்பிட்ட கால இடைவெளிகளில் நீர் மேலெழும் உயரம், அதன் வடிவம் என்பன மாறிக்கொண்டிருக்கும்படி வடிவமைக்கப்பட்ட நீரூற்றுக்கள் அசைவியக்க நீர்த்தாரைகளாகும். இத்தகைய நீரூற்றுக்களில் ஒளியமைப்பும்கூட அதன் நிறம், ஒளிச்செறிவு என்பன மாறிக்கொண்டிருக்கும் படி அமைக்கப்படலாம். இசை நீரூற்றுக்கள்அசைவியக்க நீரூற்றுக்களை போன்றே இவற்றின், நீர் மேலெழும் உயரம், அதன் வடிவம், ஒளியமைப்பு அம்சங்கள் என்பன மாறிக்கொண்டிருக்கும் ஆயினும், அவற்றைப்போல் குறிப்பிட்ட கால இடைவெளிகளில் மாறாது, அவற்றுடன் இணைக்கப்பட்டுள்ள இசைக்கு ஒத்த வகையில் இயங்குகின்றன. இந்த இயக்கம் நீர் நிரல்கள் இசைக்கு ஏற்றாற்போல் நடனமாடுவது போலிருக்கும். மிதக்கும் நீரூற்றுக்கள்இவை நீர்நிலைகளில் மிதப்பதுபோல் அமைந்திருக்கும் நீரூற்றுக்கள் ஆகும். பொதுவாக ஏரிகள் போன்ற பெரிய நீர்நிலைகளிலேயே இவை அமைக்கப்படுகின்றன. சில புகழ் பெற்ற நீரூற்றுக்கள்![]()
மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia