நீலிமா கதியார்
நீலிமா கதியார் (Neelima Katiyar) என்பவர் இந்திய அரசியல்வாதியும் மற்றும் உத்தரப் பிரதேச அரசாங்கத்தின் மாநில அமைச்சராக இருந்தவரும் ஆவார். இவர் உத்தரப் பிரதேச சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். தனிப்பட்ட வாழ்க்கைநீலிமா உத்தரப் பிரதேச மாநிலம் கல்யாண்பூரில் பிறந்தார். இவர் உத்தரப்பிரதேச முன்னாள் அமைச்சர் பிரேம் லதா கதியாரின் மகள் ஆவார்.[2] கல்விநீலிமா கான்பூர் பல்கலைக்கழகம் மற்றும் சத்ரபதி ஷாகுஜி மகாராஜ் பல்கலைக்கழகத்தில் முதுகலை மற்றும் இளங்கலைப் பட்டங்களைப் பெற்றார். அரசியல் வாழ்க்கைநீலிமா 2017ஆம் ஆண்டில் உத்தரப் பிரதேசத்தின் கால்யாண்பூர் சட்டமன்றத் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராகப் பாரதிய ஜனதா கட்சி வேட்பாளராகப் போட்டியிட்டு 86620 வாக்குகளைப் பெற்றுத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[3] நீலிமா 21 ஆகத்து 2019 அன்று யோகி ஆதித்யநாத் அமைச்சரவையில் மாநில அமைச்சராக நியமிக்கப்பட்டார்.[4] நீலிமா 2022ஆம் ஆண்டு நடைபெற்ற உத்தரப்பிரதேச சட்டமனறத் தேர்தலில் மீண்டும் கல்யான்பூர் சட்டமன்ற தொகுதியில் பாஜக வேட்பாளராகப் போட்டியிட்டு 98997 வாக்குகள் பெற்று வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினராக இரண்டாவது முறையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia