நுவாகோட் மாவட்டம்![]() நுவாகோட் மாவட்டம் (Nuwakot District) (நேபாளி: नुवाकोट जिल्लाⓘ, தெற்காசியாவின் நேபாள நாட்டில், மத்திய வளர்ச்சி பிராந்தியத்தில் அமைந்த பாக்மதி மாநிலத்தின் 13 மாவட்டங்களில் ஒன்றாகும். மேலும் இம்மாவட்டம், நேபாளத்தின் எழுபத்தி ஐந்து மாவட்டங்களில் ஒன்றாகும். இதன் நிர்வாகத் தலைமையிடம் பிதார் நகரம் ஆகும். பாக்மதி மண்டலத்தில் உள்ள மலைப் பாங்கான இம்மாவட்டம் ஆகும். 1,121 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட இம்மாவட்டத்தின், 2011-ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, இம்மாவட்ட மக்கள் தொகை 2,77,471 ஆகும். இங்கு நேபாள மொழி, தமாங் மொழிகள் பேசப்படுகிறது. பெயர்க் காரணம்![]() ஏழு அடுக்குகளுடன் கூடிய தொன்மை வாய்ந்த நுவாகோட் கோட்டை இம்மாவட்ட மலையின் உச்சியில் அமைந்துள்ளது. எனவே இம்மாவட்டத்திற்கு நுவாகோட் என்ற பெயர் ஏற்பட காரணமாயிற்று. இங்குள்ள தேவிகாட் கிராமத்தில் தாடி மற்றும் திரிசூலி ஆறுகள் ஒன்று கூடுகிறது. புவியியல் மற்றும் தட்ப வெப்பம்இம்மாவட்டம் கடல் மட்டத்திலிருந்து 300 மீட்டர் முதல் 5,000 மீட்டர் உயரம் வரை பரவியுள்ளது. எனவே இம்மாவட்டத்தின் தட்ப வெப்ப நிலை மேல் வெப்ப மண்டலம், மிதவெப்ப வளையம், மிதமான காலநிலை, மான்ட்டேன் #ஆல்ப்ஸ் மலை காலநிலை, துருவப் பகுதி காலநிலை, வெண்பனி படர்ந்த பகுதிகள் என ஐந்து நிலைகளில் காணப்படுகிறது. [1] பொருளாதாரம்சமவெளிப் பகுதிகள் குறைந்த, மலைப் பாங்கான இம்மாவட்டத்தின் பொருளாதாரம் மலைத் தோட்டப் பயிர்கள், கால்நடை வளர்த்தல் மற்றும் சுற்றுலா மூலம் ஈட்டப்படுகிறது. நுவாகோட் மாவட்டத்தில் அறுபத்தி ஒன்று கிராமிய நகராட்சிகளும் மற்றும் ஒரு நகராட்சி மன்றம் உள்ளாட்சிப் பணிகளை மேற்கொள்கிறது. இதனையும் காண்கமேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia