நூபுர் திவாரி (Noopur Tiwari) ஓர் இந்தியப் பத்திரிகையாளர் [1]பெண்ணியவாதி, [2]இலாப நோக்கற்ற, ப்ளாக்செயின் தலைமையிலான பாலியல் வன்முறைக்கு எதிராக செயல்படும் சுமாஷ்போர்டுவின் நிறுவனர் ஆவார் . [3] 2004 முதல் ஐரோப்பாவிலிருந்து பரந்த அளவிலான முக்கிய அரசியல், பொருளாதார மற்றும் சமூக நிகழ்வுகளை என்டிடிவி[1] க்காக அவர் நேரடியாக வழங்கியுள்ளார். திவாரி ஹிந்துஸ்தான் டைம்ஸ், [4]பிசினஸ் ஸ்டாண்டர்ட், [5]தி கேரவன், [6] தெ வயர்.இன்[7] மற்றும் இசுக்ரோல்.இன் ஆகியவற்றிற்காக எழுதுகிறார். [8] அவர் ஜெண்டர்லோஜிந்தியா என்பதன் இணை கண்காணிப்பாளராக உள்ளார். [9] திவாரி 1996-2003 வரை [10] என்டிடிவியின் தயாரிப்பாளராக பணியாற்றினார்.
தொழில்
என்டிடிவி உடன் ஐரோப்பா நிருபர் மற்றும் உறைவிடப் பதிப்பாசிரியராக திவாரி 2004 முதல் கண்டம் முழுவதிலுமிருந்து முக்கிய நிகழ்வுகளை வழங்கியுள்ளார். வரி ஏய்ப்பு மற்றும் பணமோசடி பற்றி நிதி உலகில் உள்ள முக்கிய இடித்துரைப்பளர்களின் பிரத்யேக நேர்காணல்களுடன் அவர் விரிவாக அறிக்கை வெளியிட்டார். [11][12][13] என்டிடிவி இன் இந்தியா செய்திக்காக ஐரோப்பாவில் புர்கா விவாதம், பிரான்சில் சீக்கியர்கள், WW1 இல் இந்திய வீரர்கள் போன்ற அத்தியாயங்களையும் அவர் வழங்கினார். [14] பிரெஞ்சு விமானம் தாங்கி கப்பலான க்ளெமென்சியோ (2004) பற்றிய அவரது முக்கிய செய்தி அறிக்கையை தொடர்ந்து இந்திய ஊடகங்களில் நிகழ்வின் விரிவான செய்தி வெளியானது மற்றும் இந்தியாவின் உச்ச நீதிமன்ற தீர்ப்பின் பின்னர் விமானம் தாங்கி கப்பல் திரும்பிச் செல்ல வேண்டியிருந்தது. [15] விடுதலைப் புலிகளுடனான தனது நேர்காணல்களில் (2006), அன்ரன் பாலசிங்கம் ,ராஜீவ் காந்தியின் கொலைக்கு வருத்தம் தெரிவித்தார். [16][17] திவாரி ஐரோப்பாவில் பல முக்கிய தேர்தல்கள் மற்றும் இந்திய-பிரெஞ்சு இருதரப்பு வருகைகளை உள்ளடக்கியுள்ளார். [18][19] சிஓபி 21 பாரிசு உச்சி மாநாடு, [20] கிரேக்க வாக்கெடுப்பு, [21] பாப்பல் இரகசியக் கூட்டம், [22] இந்திய-பிரெஞ்சு குடிசார் அணுசக்தி ஒப்பந்தம், [23] இத்தாலி-இந்தியா கடற்படையினர் மீது இராஜதந்திர சண்டை, [24] இந்தியா மற்றும் பாகிஸ்தான் சர்வதேச நீதிமன்றம், ஆகிய பல நிகழ்வுகளை வழங்கியுள்ளார் [25] அவர் பாரிசு பயங்கரவாதத் தாக்குதல் பற்றிய நிகழ்வுகளை வழங்கியதற்காக ENBA 2016 விருதை வென்றார். [26][27]
தொலைக்காட்சி தொடர்
நூபுர் திவாரி குஸ்டாகி மாஃப், கிரேட் இந்தியா தமாஷா என்ற நையாண்டி நிகழ்ச்சியைத் தொடங்கினார். அதனைத் தயாரித்து இயக்கியுள்ளார் [28] இது 2004 இல் என்டிடிவி க்காக பிரெஞ்சு மரியோனெட் தயாரிப்பாளர்களான அலைன் டுவெர்ன் மற்றும் லாரன்ட் ஊட் ஆகியோருடன் உருவாக்கப்பட்டது.. திவாரி அரசியல்வாதிகள் மற்றும் கலைஞர்கள், மக்புல் பிதா உசைன், முன்னாள் இந்திய பிரதமர் வி. பி. சிங், ஜீனா இசி கா நாம் ஹைக்காகஅரசியல்வாதி லாலு பிரசாத் யாதவ் போன்ற அத்தியாயங்களை தயாரித்தார்:இது ஜீ டிவியில் ஒளிபரப்பான பிரபலங்களின் வாழ்க்கை பற்றிய நிகழ்ச்சி ஆகும்.
கலாச்சாரம் மற்றும் வாழ்க்கை முறை பற்றிய தனது அறிக்கைகளில் திவாரி லியோனார்டோ டி கேப்ரியோ மற்றும் மெரில் ஸ்ட்ரீப் போன்ற நடிகர்களை நேர்காணல் செய்துள்ளார். [29] ஒயின் மற்றும் ஆர்ட்டில் "என்டிடிவி குட் டைம்ஸ் " க்கான வாழ்க்கை முறை நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார்.