நெஞ்சில் துணிவிருந்தால் (2017 திரைப்படம்)
நெஞ்சில் துணிவிருந்தால் (Nenjil Thunivirundhal), சுசீந்தனின்இயக்கத்தில், தமிழில் ஆண்டனியின் ,சக்ரி தெலுங்கில் சிக்ருபட்டி ஆகியோரின் தயாரிப்பில் வெளியாகியுள்ள தமிழ், தெலுங்குத் திரைப்படம். இத்திரைப்படத்தில் சந்தீப் கிசன், மெக்ரீன் பிர்சடா ஆகியோர் முதன்மைப் பாத்திரங்களிலும் சூரி, ஹரிஷ் உத்தமன்ஆகியோர் துணைப்பாத்திரங்களிலும் நடித்துள்ளனர். இத்திரைப்படம் இலக்சுமன் குமார் ஒளிப்பதிவிலும், டி. இமானின் இசையிலும், காசி விசுவநாதனினின் படத்தொகுப்பிலும் உருவானது. இப்படத்தின் படப்பிடிப்பு திசம்பர் 2016இல் தொடங்கப்பட்டு 10நவம்பர் 2017இல் படம் வெளியானது.[1][2][3][4] நடிப்பு
படப்பணிகள்இப்படத்தின் படப்பிடிப்பு திசம்பர் 2016இல் தொடங்கப்பட்டு ஜூன் 2017 இல் முடிந்தது. இப்படம்10நவம்பர் 2017இல் படம் திரையரங்குகளில் வெளியானது.[5] கதைமகேசு, குமார் ஆகிய இரண்டுபேரும் நெருக்கமான நண்பர்கள். குமார் தங்கை சாதிகாவிற்கும் மகேசுக்கும் காதல். ஒரு சதியின் பொருட்டு மகேசை கொன்றிட துரைப்பாண்டியாக குழுவினர் திட்டமிடுகின்றனர் ஆள்மாறாட்டம் ஏற்பட்டதால், அவருக்கு பதில் அவரின் நண்பன் குமாருக்கு வலை விரிக்கின்றனர். குறி வைக்கப்பட்டதில் இருந்து தப்பிய குமார். இந்த நிகழ்வு குறித்து காவல்துறையின் உதவியுடன் துப்பு துலக்குகின்றார். துரைப்பாண்டியின் இலக்கு தனது தங்கை எனவும் தனது நண்ப இல்லை எனவும் அறிகின்றார். தன் நண்பனையும், தங்கையையும் அவர் காத்தாரா? துரைப்பாண்டியின் கொடுஞ் செயல்களுக்கு முடிவு காணப்பட்டதா என்பதே கதை.[6][7] இசைஇத்திரைப்படத்திற்கு டி. இமான் இசையமைத்து வருகின்றார். இப்படத்திற்கு வைரமுத்து, யுகபாரதி, மதன் கார்க்கி ஆகியோர் பாடல்களை எழுதியுள்ளனர். சான்றுகள்
வெளியிணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia