நெஞ்சுக்கு நீதி (2022 திரைப்படம்)
நெஞ்சுக்கு நீதி (Nenjuku Needhi) என்பது 2022 ஆம் ஆண்டு வெளியான இந்தியத் தமிழ் மொழி அரசியல் நாடகத் திரைப்படமாகும்.[1] இத்திரைப்படத்தை அருண்ராஜா காமராஜ் இயக்கியுள்ளார். போனி கபூர் தயாரித்தார். இத்திரைப்படம் 2019 ஆம் ஆண்டு வெளியான இந்தி திரைப்படமான ஆர்டடிகில் 15 இன் மறுஉருவாக்கமாகும். இதில் உதயநிதி ஸ்டாலின், ஆரி அருஜுனன், தன்யா ரவிச்சந்திரன் மற்றும் ஷிவானி ராஜசேகர் ஆகியோர் நடித்துள்ளனர். ஜாதி அடிப்படையிலான பாகுபாடு மற்றும் பிற குற்றங்கள் நிராகரிக்கப்பட்ட பிறகு இந்தியாவில் உள்ள சாதி அமைப்புக்கு எதிராக ஒரு நேர்மையான போலீஸ் அதிகாரி தாக்குதலைத் தொடங்குவதைச் சுற்றி படம் சுழல்கிறது. படத்தின் முதன்மை படப்பிடிப்பு ஏப்ரல் 2021 இல் தொடங்கி அந்த டிசம்பரில் முடிவடைந்தது . நெஞ்சுக்கு நீதி திரைப்படம் 20 மே 2022 அன்று திரையரங்குகளில் வெளியாகி நேர்மறையான விமர்சனங்களைப் பெற்றது, உதயநிதியின் நடிப்பு மற்றும் கதைக்கு பாராட்டுகள் கிடைத்தன. இப்படம் திரையரங்குகளில் 50 நாட்களை நிறைவு செய்தது.[2] கதைக்களம்இந்தியக் காவல் பணி அதிகாரியான விஜய ராகவன் (உதயநிதி ஸ்டாலின்) சாதிப் பாகுபாடும் தீண்டாமையும் இன்னும் நடைமுறையில் உள்ள தமிழகத்தின் கிராமப்புறப் பகுதியில் பணியமர்த்தப்படுகிறார். விஜய ராகவன் பல புத்தகங்களில் பாகுபாடு பற்றி படித்திருந்தாலும், நிஜ வாழ்க்கையில் இந்த பிரச்சனைகளை எதிர்கொள்வது அவருக்கு கடினமாக உள்ளது. அவர் தன்னைச் சுற்றியுள்ள மக்களின் சித்தாந்தங்களுடன் இன்னும் போராடி அவர்களுக்கு கல்வி கற்பிக்க முயற்சிக்கும்போது, உள்ளூர் தொழிற்சாலையில் பணிபுரிந்த மூன்று தலித் சிறுமிகள் காணாமல் போன ஒரு மர்மமான வழக்கு, அவரது வாழ்க்கையை மேலும் துயரமாக்குகிறது. இருவர் இறந்து கிடக்கிறார்கள், ஆனால் மூன்றாவது நபரின் தடயமே இல்லாததால், வழக்கு சிக்கலானதாகிறது. இந்தக் கொடூரமான குற்றத்தின் பின்னணியில் யார் இருக்கிறார்கள்? சாதிவெறி கொண்ட உயர் அதிகாரிகளின் அழுத்தத்தை மீறி விஜய ராகவன் இந்த வழக்கை எப்படி முன்னெடுத்துச் செல்கிறார்? என்பதுதான் கதைக்களத்தின் மீதமுள்ள பகுதியை உருவாக்குகிறது. நடிகர்கள்
தயாரிப்பு பணிகள்செப்டம்பர் 2019 இல், போனி கபூர் 2019 இந்தித் திரைப்படமான ஆர்டடிகில் 15 இன் தமிழ் மறு உருவாக்க உரிமையை வாங்கியதாக அறிவிக்கப்பட்டது.[6] ஆகஸ்ட் 2020 இல், மறு உருவாக்கம் உருவாகி வருவதாக கபூர் உறுதிப்படுத்தினார். கனா (2019) படத்திற்குப் பிறகு அருண்ராஜா காமராஜ் இயக்கும் இரண்டாவது படம் இது. முதலில் ஆயுஷ்மான் குரானா நடித்த பாத்திரத்திற்கு உதயநிதி ஸ்டாலின் தேர்வு செய்யப்பட்டார்.[7] பொள்ளாச்சியில் ஏப்ரல் 2021 இல் முதன்மை படப்படிப்பு தொடங்கியது.[8] நெஞ்சுக்கு நீதி என்ற தலைப்பு உதயநிதியின் தாத்தா மு. கருணாநிதியின் சுயசரிதையின் நினைவாக 16 அக்டோபர் 2021 அன்று அறிவிக்கப்பட்டது [9][10] முதன்மை படப்பிடிப்பு டிசம்பர் மத்தியில் இறுதி செய்யப்பட்டது.[11] வெளியீடுதிரையரங்கம்நெஞ்சுக்கு நீதி 20 மே 2022 அன்று உலகம் முழுவதும் வெளியிடப்பட்டது [12] இப்படத்தின் தமிழ்நாட்டு விநியோக உரிமையை ரெட் ஜெயண்ட் மூவிஸ் பெற்றுள்ளது. இது முதலில் மார்ச் 2022 இல் வெளியிட திட்டமிடப்பட்டது, ஆனால் பிற படங்களான எதற்கும் துணிந்தவன் மற்றும் ராதே ஷியாம் போன்றவற்றுடன் மோதலைத் தவிர்க்கும் பொருட்டு தாமதமானது.[13] வீட்டு ஊடகம்நெஞ்சுக்கு நீதி படத்தின் திரையரங்குகளுக்குப் பிந்தைய இணைய வழித் திரையிடல் உரிமையை சோனிலைவ் வாங்கியுள்ளது.[14] படம் 23 ஜூன் 2022 முதல் அங்கு வீட்டு ஊடகங்களில் திரையிடப்பட்டது.[15] இத்திரைப்படத்தின் ஊடக உரிமை கலைஞர் தொலைக்காட்சிக்கு விற்கப்பட்டது, அங்கு ஆகஸ்ட் 15 அன்று திரையிடப்பட்டது.[16] மேற்கோள்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia