நெப்டியூனியம் டெட்ராகுளோரைடு (Neptunium tetrachloride ) என்பது NpCl4 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும் . நெப்டியூனியமும் குளோரினும் சேர்ந்து இந்த இருமச் சேர்மம் உருவாகிறது.[ 1] [ 2]
தயாரிப்பு
நெப்டியூனியம் நைட்ரைடுடன் ஐதரோகுளோரிக் அமிலத்தைச் சேர்த்து வினைபுரியச் செய்தால் நெப்டியூனியம் டெட்ராகுளோரைடு உருவாகிறது:[ 3]
2NpN + 8HCl -> N2 + 4H2 + 2NpCl4
நெப்டியூனியம் சல்பைடுடன் ஐதரோகுளோரிக் அமிலத்தைச் சேர்த்து வினைபுரியச் செய்தாலும் நெப்டியூனியம் டெட்ராகுளோரைடு உருவாகும்:
Np2 S3 + 8HCl -> 2NpCl4 + 3H2 S + H2
நெப்டியூனியம்(IV) ஆக்சைடு அல்லது NpO2 உடன் கார்பன் டெட்ராகுளோரைடைச் சேர்த்து வினையில் ஈடுபடுத்தினாலும் நெப்டியூனியம் டெட்ராகுளோரைடு மஞ்சள் நிறத்தில் பதங்கமாகிறது. [ 4]
NpO2 + CCl4 -> NpCl4 + CO2
மற்ற வினைகளும் இதற்காகப் பயன்படுத்தப்படுகின்றன.[ 5]
இயற்பியல் பண்புகள்
I4/amd என்ற இடக்குழுவில் நாற்கோணப் படிக அமைப்பில் நெப்டியூனியம் டெட்ராகுளோரைடு படிகமாகிறது.[ 6]
வேதியியல் பண்புகள்
நெப்டியூனியம் டெட்ராகுளோரைடு அம்மோனியாவுடன் வினை புரிந்து நெப்டியூனியம் முக்குளோரைடைத் தருகிறது.:[ 3]
6NpCl4 + 2NH3 -> 6NpCl3 + 6HCl + N2
450 ° செல்சியசு வெப்பநிலையில் ஐதரசனுடன் சேர்த்து வினைபுரியச் செய்தால் நெப்டியூனியம் டெட்ராகுளோரைடு சிதைவடைந்து நெப்டியூனியம் முக்குளோரைடாக மாறுகிறது..
2NpCl4 + H2 -> 2NpCl3 + 2HCl
மேற்கோள்கள்
↑ "WebElements Periodic Table » Neptunium » neptunium tetrachloride" . webelements.com. Retrieved 1 April 2024 .
↑ Stone, J. A.; Jones, E. R. (15 February 1971). "Mössbauer Spectra and Magnetic Susceptibility of Neptunium Tetrachloride below 85°K" . The Journal of Chemical Physics 54 (4): 1713–1718. doi :10.1063/1.1675076 . https://pubs.aip.org/aip/jcp/article-abstract/54/4/1713/445637/Mossbauer-Spectra-and-Magnetic-Susceptibility-of?redirectedFrom=fulltext . பார்த்த நாள்: 1 April 2024 .
↑ 3.0 3.1 Sheft, Irving; Fried, Sherman (1950). New Neptunium Compounds (in ஆங்கிலம்). U.S. Atomic Energy Commission, Technical Information Division. p. 5. Retrieved 1 April 2024 .
↑ Fried, S. (1947). The Basic Dry Chemistry of Neptunium (in ஆங்கிலம்). Atomic Energy Commission . p. 1. Retrieved 1 April 2024 .
↑ Ahrland, S.; Bagnall, K. W.; Brown, D. (7 June 2016). The Chemistry of the Actinides: Comprehensive Inorganic Chemistry (in ஆங்கிலம்). Elsevier . p. 181. ISBN 978-1-4831-5934-8 . Retrieved 1 April 2024 .
↑ Spirlet, Marie-Rose; Jemine, Xavier; Goffart, Jean (1 January 1995). "A single-crystal X-ray structure determination of neptunium tetrachloride" . Journal of Alloys and Compounds 216 (2): 269–271. doi :10.1016/0925-8388(94)01264-I . பன்னாட்டுத் தர தொடர் எண் :0925-8388 . https://www.sciencedirect.com/science/article/abs/pii/092583889401264I . பார்த்த நாள்: 1 April 2024 .