நெப்டியூனியம்(III) குளோரைடு
நெப்டியூனியம்(III) குளோரைடு (Neptunium(III) chloride) என்பது NpCl3 என்ற மூலக்கூற்று வாய்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். இது கதிரியக்கப் பண்பு கொண்ட ஒரு சேர்மமாகும். நெப்டியூனியமும் குளோரினும் சேர்ந்து இச்சேர்மம் உருவாகிறது. தயாரிப்புஅம்மோனியா அல்லது ஐதரசனை பயன்படுத்தி நெப்டியூனியம்(IV) குளோரைடை 350~400 ° செல்சியசு வெப்பநிலையில் சிதைவு வினைக்கு உட்படுத்தினால் நெப்டியூனியம்(III) குளோரைடு உருவாகும்.[1]
இயற்பியல் பண்புகள்நெப்டியூனியம்(III) குளோரைடு 800 பாகை செல்சியசு வெப்பநிலையில் உருகும். பச்சை நிறத்தில் திடப்பொருளாகக் காணப்படுகிறது. a = 740.5 பைக்கோமீட்டர் மற்றும் c = 427.3 பைக்கோமீட்டர் மற்றும் ஓர் அலகு கலத்திற்கு இரண்டு வாய்பாட்டு அலகுகள் என்ற அணிக்கோவை அளவுருக்கள் கொண்டு, P63/m (எண். 176) என்ற இடக்குழுவில் அறுகோண படிக அமைப்பில் படிகமாக்குகிறது. இதன் படிக அமைப்பு யுரேனியம்(III) குளோரைடு படிக அமைப்பை ஒத்துள்ளது. கட்டமைப்பில், நெப்டியூனியம் அணுக்கள் ஒவ்வொன்றும் ஒன்பது குளோரின் அணுக்களால் சூழப்பட்டுள்ளன. இதன் விளைவாக மூவுச்சி முக்கோண பட்டக ஒருங்கிணைப்பு உருவாகிறது. வேதிப் பண்புகள்நெப்டியூனியம்(III) குளோரைடு 450 ° செல்சியசு வெப்பநிலையில் நீராற்பகுப்புக்கு உட்பட்டு நெப்டியூணியம் ஆக்சிகுளோரைடை (NpOCl) உருவாக்குகிறது.[1] மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia