நைகர்-கொங்கோ மொழிகள்
மொழிகளின் எண்ணிக்கை அடிப்படையில் நைகர்-கொங்கோ மொழிகள் உலகின் மிகப்பெரிய மொழிக் குடும்பங்களில் ஒன்றாக இருப்பதுடன், நிலவியல் பரம்பல், பேசுபவர்களின் எண்ணிக்கை (600 மில்லியன் மக்கள், அதாவது 85% ஆப்பிரிக்க மக்கள் தொகை), பேசப்படும் ஆப்பிரிக்க மொழிகளின் எண்ணிக்கை (1514) போன்றவற்றின் அடிப்படையில், ஆப்பிரிக்காவில் மிகப் பெரிய மொழிக்குழுவாக நைகர்-கொங்கோ மொழிக்குழு இருக்கின்றது[1] ஜோசேப் ஹெச். கிறீன்பேர்க் என்பவரே முதலில் இக் குடும்பத்தின் எல்லைகளை அடையாளம் கண்டவராவார். அவருடைய "ஆபிரிக்காவின் மொழிகள்" என்னும் நூலில், இக் குடும்பத்தை அவர் நைகர்-கொர்டோபானியன் என அழைத்தார். ஜோன் பெந்தோர்-சாமுவேல் என்பார் தற்போது மொழியியலாளரிடையே பரவலாக வழக்கிலுள்ள நைகர்-கொங்கோ என்னும் பெயரை அறிமுகப்படுத்தினார். (கொர்டோபானியன் மொழிகள் ஐப் பார்க்கவும்) நைகர்-கொங்கோவினுள் அடங்கும் முக்கிய மொழிகள் அல்லது துணைக் குழுக்கள்.
உசாத்துணைகள்
மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia