ந,ந,ஈ,தி சின்னங்கள்
நம்பி நங்கை ஈரர் திருநர் சமூக மக்கள், வரலாற்றில் தங்களது சுய அடையாளத்தினை வெளிப்படுத்தும் விதமாக ஒற்றுமை, பெருமை, ஏற்றுக்கொண்ட மதிப்பீடுகள் மற்றும் ஒருவருக்குவரிடம் உள்ள பற்றுறுதியினை விழிப்படுத்தும் விதமாக சில சின்னங்களை ஏற்றுக் கொண்டனர். இந்த சின்னங்கள், ந,ந,ஈ,தி சின்னங்கள் (LGBT symbols) என்று அழைக்கப்படுகின்றன. தமது சமூகங்களுக்கு இடையேயும் பொது கலாச்சாரத்திடமும் எண்ணங்கள், கருத்துக்கள், அடையாளங்கள் ஆகியவற்றை தொடற்புறுத்த இச்சின்னங்கள் உதவுகின்றன. சர்வதேச அளவில் மிகவும் அங்கீகரிக்கப்பட்ட இரண்டு சின்னங்கள் இளஞ்சிவப்பு முக்கோணம் மற்றும் வானவில் கொடி ஆகும் . கொடிகள்வானவில்![]() கில்பர்ட் பேக்கர் என்பவர் 1978 சான் பிரான்சிஸ்கோ உகவர் விடுதலை தின கொண்டாட்டத்திற்காக வானவில் பெருமிதக் கொடியை வடிவமைத்தார். அவர் கொடியை இளஞ்சிவப்பு முக்கோணத்தின் அடையாளத்திற்கு மாற்றாகவும் "நம்பிக்கையின் சின்னம்" மற்றும் விடுதலையினைக் குறிக்கும் வகையில் வடிவமைத்தார். [1] கொடி உண்மையான வானவில்லை சித்தரிக்கவில்லை. மாறாக, வானவில்லின் நிறங்கள் கிடைமட்ட கோடுகளாகக் காட்டப்படும், மேலே சிவப்பு மற்றும் கீழே ஊதா நிறங்களும் இருக்கும் வகையில் அமைக்கப்பட்டிருக்கும். இது உலகெங்கிலும் உள்ள ஓரின சேர்க்கையாளர்கள் மற்றும் அகனள் ஆகியோரின் பன்முகத்தன்மையைக் குறிக்கிறது. காதல் உணராத் தன்மை![]() காதல் உணராத் தன்மை பெருமிதக் கொடி ஐந்து கிடைமட்ட கோடுகளைக் கொண்டுள்ளது, அவை மேலிருந்து கீழாக: பச்சை, வெளிர் பச்சை, வெள்ளை, சாம்பல் மற்றும் கருப்பு நிறங்களைக் கொண்டுள்ளது. இவைகள் முறையே, காதல் உணராத் தன்மை, காதல் உணரா நிறமாலை, அழகியல் ஈர்ப்பு, சாம்பல்-காதல் உணராத் தன்மை மற்றும் பகுதி காதல் உணராத் தன்மை மற்றும் பாலியல் நிறமாலை ஆகியவற்றைக் குறிக்கின்றன. [2] பாலீர்ப்பின்மை![]() பாலீர்ப்பின்மை பெருமிதக் கொடி மேலிருந்து கீழாக, நான்கு கிடைமட்ட கோடுகளைக் கொண்டுள்ளது. அவற்றின் நிறங்கள் முறையே கருப்பு, சாம்பல், வெள்ளை மற்றும் ஊதா ஆகியனவாகும் . [3] [4] கருப்பு பட்டை பாலீர்ப்பின்மையினை பிரதிபலிக்கிறது; சாம்பல்-பட்டை பாலீர்ப்பிலாதவர்கள் மற்றும் பகுதி பாலீர்ப்பில்லாதவர்களைக் குறிக்கிறது; வெள்ளை கோடு கூட்டாளிகளைக் குறிக்கிறது; மற்றும் ஊதா பட்டை சமூகத்தை குறிக்கிறது. [5] [6] இருபாலீர்ப்பு![]() இந்தச் சின்னம் டிசம்பர் 5, 1998 இல் அறிமுகப்படுத்தப்பட்டது, [7] ந,ந,ஈ,தி சமூகம் மற்றும் ஒட்டுமொத்த சமுதாயத்தில் இருபாலினரின் பிரதிபலிப்பு மற்றும் பார்வை ஆகியனவற்றை அதிகரிக்க மைக்கேல் பேஜால் இருபாலீர்ப்பு பெருமிதக் கொடி வடிவமைக்கப்பட்டது. பேன்டோன் மேட்சிங் சிஸ்டம் (பிஎம்எஸ்) என்பதன் கலவையினை இந்த சின்னங்களுக்காககத் தேர்வு செய்தனர். இளஞ்சிவப்பு, ஊதா மற்றும் ராயல் (நீலம்) ஆகியவற்றின் கலவையை இந்தச் சின்னத்திற்குத் தேர்வு செய்தனர். [7] செவ்வகக் கொடி மேலே ஒரு பரந்த இளஞ்சிவப்பு கோடும், கீழே நீல நிறத்தில் ஒரு அகலமான பட்டை மற்றும் மையத்தில் ஒரு குறுகிய ஊதா நிற பட்டை ஆகியவற்றை இந்த சின்னம் கொண்டுள்ளது. ஊடு பாலினர்![]() பிறப்பின் போது ஆண் அல்லது பெண்ணின் அனைத்து உயிரியல் பண்புகளையும் வெளிப்படுத்தாத அல்லது குணாதிசயங்களின் கலவையை வெளிப்படுத்தாதவர்கள் ஊடுபாலின மக்களாக அறியப்படுகின்றனர் மக்கள்தொகையில் 0.05% முதல் 1.7% வரை ஊடுபாலின பண்புகள் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. [8] [9] ஊடுபாலின மக்கள் உரிமைகளுக்காக மோர்கன் கார்பெண்டர் என்பவர் ஜூலை 2013 ஆம் ஆண்டில் இந்தக் கொடியினை உருவாக்கினார். அகனள்![]() அகனள் பெருமிதக் கொடிக்கு ஒற்றை கொடி வடிவமைப்பு பரவலாக ஏற்றுக்கொள்ளப்படவில்லை. [10] இருப்பினும், பரவலாகப் பயன்படுத்தப்படும் பல கொடிகள் உள்ளன. பண்புசார் ஈர்ப்பாளர்![]() பண்புசார் ஈர்ப்பாளர்களுக்கான கோடி 2010ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. இளஞ்சிவப்பு, மஞ்சள், நீலம் ஆகிய நிறங்களில் மூன்று கிடைமட்ட பட்டைகள் இக்கொடியில் அமைத்துள்ளது.[11] இளஞ்சிவப்பு நிறம் பெண்களால் ஈர்க்கப்படுவதைக் குறிக்கிறது. நீல நிறம் ஆண்களால் ஈர்க்கப்படுவதைக் குறிக்கிறது. மஞ்சள் நிறம் மற்ற அனைவராலும் ஈர்க்கப்படுவதைக் குறிக்கிறது. பிற சின்னங்கள்முக்கோணங்கள்ந.ந.ஈ.தி சின்னங்களுள் இளஞ்சிவப்பு முக்கோணம் பழமையான ஒன்றாகும். இளஞ்சிவப்பு நிறத்தில் முக்கோணத்தின் ஒரு முனை கீழ்நோக்குமாறு இச்சின்னம் அமைந்துள்ளது. நாஜி வதைமுகாம்களில் தற்பால்சேர்க்கை ஆண்களைக் குறிக்க இச்சின்னம் பயன்பட்டது. வதை முகாம்களில் இருந்த பெரும்பாலான உகவர்கள் பெரும் இன அழிப்பில் இறந்து விட்டனர். பின்னர் உகவர் சமூகத்தால் தங்களைக் குறிக்க இச்சின்னம் பயன்படுத்தப்படுகிறது. ![]() நாஜி கையெடுகளின்படி பெண்களின் தற்பால்சேர்க்கை குற்றமாகக் கருதப்படாவிடினும், பெண்கள் செய்ய வேண்டிய பணிகளாக நாஜியினர் கருதியவற்றை செய்யாத பெண்களைக் குறிப்பிட வதைமுகாம்களில் கருப்பு முக்கோணத்தைப் பயன்படுத்தினர். பின்னர் அகனள் சமூகத்தால் இச்சின்னம் தங்களைக் குறிக்க ஏற்றுக்கொள்ளப்பட்டது. ![]() பாலினக் குறியீடுகள்பாலினக் குறியீடு (gender symbol) என்பது உயிரியலில் பால்பகுப்பைக் குறிக்கப் பயன்படும் கீறல் வடிவக் குறியீடாகும். முதலில் இவை கிரேக்க கடவுள்களான செவ்வாயையும் வெள்ளியையும் குறிக்கப் பயன்பட்டன. நவீன உயிரியலில் போர்த்தெய்வம் செவ்வயின் குறியீடான ♂️ ஆணைக் குறிக்கவும் அழகுக்கடவுள் வெள்ளியின் குறியீடான ♀️ பெண்ணைக் குறிக்கவும் பயன்படுகிறது. இதன் அடிப்படையில், உகவர்களைக் குறிக்க இரண்டு ஆண்களுக்கான குறியீடுகளை இணைத்தும் (⚣) அகனள்களைக் குறிக்க இரண்டு பெண்களைகான குறியீடுகளை இணைத்தும் (⚢) பயன்படுத்தப் படுகிறது. ![]() ஆண்களுக்கான குறியீடையும் (♂️) பெண்களுக்கான குறியீடையும் (♀️) இணைத்த குறியீடு (⚧) திருநர்களுக்கானதாக அறியப்படுகிறது. ![]() ஏஸ் சீட்டுபாலீர்ப்பு இல்லாதவர்களுக்கான ஆங்கிலச் சொல்லான Asexual என்பதைப் போல் ஒலிப்பதால், ஏஸ் சீட்டு சிலசமயங்களில் பாலீர்ப்பற்றவர்களைக் குறிக்கப் பயன்படுகிறது. லாம்டாகிரேக்க எழுத்தான லாம்டா உகவர் அகனள் உரிமைகளைக் குறிக்கப் பயன்படுகிறது. இச்சின்னத்தின் குறியீட்டுத் தன்மை இயற்பியலிலும் வேதியலிலும் லாம்டா ஆற்றலின் முழுமையான பரிமாற்றத்தைக் குறிக்கப் பயன்படுவதில் இருந்து வந்தது.[12] சான்றுகள்
|
Portal di Ensiklopedia Dunia