முழுஎண்கள் வளையச் சீர்மங்கள் சில: *பகாச் சீர்மங்கள்: செவ்வூதா நிறம்; *அரைப்பகாச் சீர்மங்கள்: செவ்வூதா மற்றும் பச்சை நிறம்; *முதனிலை சீர்மங்கள்: செவ்வூதா மற்றும் ஊதா நிறம்.
இயற்கணிதத்தில்பகாச் சீர்மம் (prime ideal) என்பது ஒரு சிறப்பு வகைச் சீர்மமாகும். இவை, ஒரு முழு எண் வளையத்திலுள்ள ஒரு பகா எண்ணுக்குரிய பண்புகளைக் கொண்டமைகின்ற சீர்மங்களாகும்.[1][2]
ஒரு வளையத்தின் (R) ஏதாவது இரு உறுப்புகளின் பெருக்கற்பலனானது அவ்வளையத்தின் ஒரு தகு சீர்மம் P இன் உறுப்பாக இருந்து, அவ்விரு உறுப்புகளில் ஏதேனுமொன்று P இன் உறுப்பாகவும் அமைந்தால், அச்சீர்மம், பகாச் சீர்மம் என அழைக்கப்படுகிறது
எடுத்துக்காட்டு:
வளையத்தின் ஒரு சீர்மம்:
. இது ஒரு பகாச் சீர்மம் ஆகும். ஏனெனில்:
எனில், 2, 3 இன் பெருக்குதொகை 6 . மேலும் எடுத்துக்கொள்ளப்பட்ட இரு எண்களிலொன்றான .
சிக்கலெண்கெழுக்களுடன் இரு மாறிகளிலமைந்த பல்லுறுப்புக்கோவைகளின் வளையம் என்பதை R குறிக்குமானால், Y 2 − X 3 − X − 1 என்ற பல்லுறுப்புக்கோவையால் பிறப்பிக்கப்படும் சீர்மம், பகாச் சீர்மமாக இருக்கும்.
என்ற முழுஎண் கெழுக்களைக்கொண்ட பல்லுறுப்புக்கோவை வளையத்தில், 2 மற்றும் X ஆல் பிறப்பிக்கப்படும் சீர்மம், பகாச்சீர்மமாக இருக்கும். அப்பகாச்சீர்மத்திலுள்ள பல்லுறுப்புக்கோவைகள் எல்லாவற்றிலும் மாறிலிக் கெழு இரட்டையெண்ணாக இருக்கும்.
Goodearl, K. R.; Warfield, R. B., Jr. (2004), An introduction to noncommutative Noetherian rings, London Mathematical Society Student Texts, vol. 61 (2 ed.), Cambridge: Cambridge University Press, pp. xxiv+344, doi:10.1017/CBO9780511841699, ISBN0-521-54537-4, MR2080008{{citation}}: CS1 maint: multiple names: authors list (link)
Jacobson, Nathan (1989), Basic algebra. II (2 ed.), New York: W. H. Freeman and Company, pp. xviii+686, ISBN0-7167-1933-9, MR1009787
Kaplansky, Irving (1970), Commutative rings, Boston, Mass.: Allyn and Bacon Inc., pp. x+180, MR0254021