பக்த ஸ்ரீ தியாகராஜா
பக்த ஸ்ரீ தியாகராஜா அல்லது ஸ்ரீ தியாகராஜா சரிதம் 1937 ஆம் ஆண்டு வெளியான ஒரு இந்திய தமிழ்த் திரைப்படமாகும். வீரேந்திர தேசாய் இயக்கத்தில் வெளியான இத்திரைப்படத்தில் மாதிரிமங்கலம் நடேச ஐயர், கமலா, சீதா ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடித்தனர்.[1] திரைக்கதை18 ஆம் நூற்றாண்டில் திருவாரூரில் பிறந்து திருவையாற்றில் வாழ்ந்தவரும், கருநாடக சங்கீத மும்மூர்த்திகள் எனப் போற்றப்படுபவர்களில் ஒருவருமான தியாகராஜ சுவாமிகளின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டது.[1] நடிகர்கள்மாதிரிமங்கலம் நடேச ஐயர் தயாரிப்பு விபரம்1930 களில் கடவுளர்களையும் அவர்தம் அடியார்களையும் பற்றிய பக்திப் படங்கள் வெளியாகின. 1936-37 காலப்பகுதியில் மகாத்மா கபீர்தாஸ், பட்டினத்தார், மீராபாய், அருணகிரிநாதர், சுந்தரமூர்த்தி நாயனார், பக்த அருணகிரி, பக்த துளசிதாஸ், பக்தி புரந்தரதாச, பக்த ஜெயதேவ எனப் பல இறைவன் அடியார்களைப் பற்றிய திரைப்படங்கள் வெளிவந்து அவை பெரும் வரவேற்பையும் பெற்றன. பாடல்கள்இத் திரைப்படத்தில் 32 பாடல்கள் இடம் பெற்றன. அநேகமாக எல்லாம் ஸ்ரீ தியாகராஜர் பாடிய தெலுங்கு கீர்த்தனைகள். கருநாடக இசைப் பாடகரான மாதிரிமங்கலம் நடேச ஐயர் தியாகராஜர் கீர்த்தனைகளைப் பாடி நடித்தார். இரண்டு பாடல்கள் தமிழில் அமைந்திருந்தன. தியாகராஜரிடம் வழிப்பறி செய்ய வந்த திருடர் கூட்டம் பாடும் ஒரு குழுப்பாடலும், தியாகராஜரின் எவரெனி என்ற தெலுங்கு கீர்த்தனையின் தமிழாக்கமாக சிவனோ .. என்ற பாடலும் இடம் பெற்ற தமிழ்ப் பாடல்களாகும்.[1] சான்றாதாரங்கள்
|
Portal di Ensiklopedia Dunia