பச்சமலை

பச்சமலை திருச்சி மாவட்டம் மற்றும் சேலம் மாவட்டங்களில் அமையப்பெற்ற கிழக்குத் தொடர்ச்சி குன்றாகும். இங்கு மரவள்ளி கிழங்கு முக்கியப் பயிராகப் பயிரிடப்படுகிறது. இம்மலையின் தொடர்ச்சியாக மண்மலை ஓன்றும் உள்ளது. பச்சமலை பகுதி 527.61 சதுர கீ.மீ. பரப்பளவு கொண்டது. இம்மலைப்பகுதியில் 35 காப்பு காடுகள் 19,075 எக்டேர் நிலப்பரப்பில் உள்ளன. இந்த மலை, கடல் மட்டத்திலிருந்து 160 முதல் 1,072 மீட்டர் உயரத்திலுள்ளது. இப்பகுதியில் 154 விதமான பறவையினங்களும்,135 விதமான பட்டாம்பூச்சி வகைகளும், சுமார் 50 மான் வகைகளும் வாழ்கின்றன. இதற்கு அருகே உள்ள சோலைமதி காப்புக் காட்டில் இந்திய சாம்பல் அணில்கள் காணப்படுகின்றன. மேலும் காட்டுப்பூனை, மரநாய், மலைப்பல்லி, மயில், குரங்கு, பறவைகளைக் கொல்லும் சிலந்தி, கண்ணாடி விரியன் பாம்பு ஆகிய உயிரினங்கள் இங்கு வாழ்கின்றன. இந்த மலையில் மழைக்காலத்தில் பெருக்கெடுக்கும் பெரியபக்களம், கோரையாறு அருவிகள் உள்ளன. இம்மலையில் ஏறுவதற்கு கணபாடி-கன்னிமார்சோலை பாதை, கணபாடி-ராமநாதபுரம் பாதை ஆகிய இரு பாதைகள் உள்ளன[1]. அண்மையில் பச்சமலைப் பகுதியைச் சுற்றுலாத் தலமாக மேம்படுத்த தமிழக அரசு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது [2][1]

மேற்கோள்கள்

  1. 1.0 1.1 "பச்சமலை, முத்துப்பேட்டை சுற்றுலா தலமாகிறது!". விகடன்.கொம். 9-10-2013. http://www.vikatan.com/news/article.php?aid=19109. பார்த்த நாள்: 30 அக்டோபர் 2015. 
  2. "ரூ4.5 கோடி நிதி ஒதுக்கீடு முதல்வர் அறிவிப்பு". தினகரன் (இந்தியா). 10-09-2013. http://www.dinakaran.com/Tour_Detail.asp?Nid=402&cat=7. பார்த்த நாள்: 30 அக்டோபர் 2015. 
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya