பச்சை விளக்கு (2020 திரைப்படம்)
பச்சை விளக்கு (Pachai Vilakku) என்பது 2020ஆம் ஆண்டு வெளியான இந்திய தமிழ்த் திரைப்படம் ஆகும். மாறன் இயக்கி இப்படத்தில் மாறன், தீஷா ஆகியோர் முதன்மை வேடங்களில் நடித்துள்ளனர். மேலும் இமான் அண்ணாச்சி, தாரா ஆகியோர் பிற வேடங்களில் நடித்துள்ளனர்.[1] கன்னட நடிகையான ரூபிகா இப்படத்தின் வழியாக தமிழில் அறிமுகமாகினார்.[2] நடிகர்கள்
தயாரிப்புஇப்படமானது சென்னை, தேசிய நெடுஞ்சாலை 45, திருப்போரூர், திருவண்ணாமலை ஆகிய இடங்களில் படமாக்கப்பட்டது.[3] இசைஇப்படத்திற்கு தேவேந்திரன் நான்கு பாடல்களுக்கு இசை அமைத்தார்.[3] வெளியீடுடெக்கான் குரோனிக்கிள் எழுதிய விமர்சனத்தில், "ஒரு இயக்குநராக, அவர் [மாறன்] தீஷா, தாரா மற்றும் பிற புதுமுகங்களிடமிருந்து நல்ல வேலை வாங்கி இருக்கிறார். இமான் அண்ணாச்சி சிறப்பாக நடித்துள்ளார். ஆனால் ஒரு நடிகராக, மாறன் தனது திறமைகளை வளர்த்துக் கொள்ள வேண்டும். திரைக்கதை சில நேரங்களில் கொஞ்சம் பிரசங்கம் செய்கிறது; ஆயினும்கூட, ஒரு நல்ல செய்தியை தெரிவிப்பதற்கான நோக்கம் தெரிகிறது ".[4] மேற்கோள்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia