படலம்

படலம் என்பது நூல்களில் அமைக்கப்படும் பாகுபாடுகளில் ஒன்று. தொல்காப்பியம் இதனை இலக்கண நூலில் காணப்படும்

  1. சூத்திரம்,
  2. ஓத்து,
  3. படலம்,
  4. பிண்டம்

என்னும் நான்கு உள்ளடுக்குப் படிகளில் ஒன்றாகக் குறிப்பிடுகிறது.[1] முறையில்லாமல் (கொடி போல்) ஓடிப் பல்வகைச் செய்திகள் படர்வது படலம் எனத் தொல்காப்பியம் குறிப்பிடுகிறது.[2]

காண்டத்தின் உட்பகுப்பு படலம்
கம்பராமாயணத்தில் படலம் என்பது காண்டத்தின் உட்பகுப்பாக வருகிறது. [3]
ஒப்பனை முடி
களங்காய்க்கண்ணி நார்முடிச்சேரல் நரைமுடியாலான ஒப்பனை முடியை [4] அணிந்துகொண்டிருந்தான். இது படலம் என்னும் படைத்துணியால் [5] ஆனது.[6]
சொல் விளக்கம்
படல், படர் என்னும் சொற்களில் வரும் [ல்], [ர்] எழுத்துகளை எழுத்துப்போலி என்பர்.[7] படல் செடிச் சிம்புகளைப் பரப்பிக் கட்டப்பட்டிருக்கும். அதுபோல கருத்துகளைப் பரப்பிக் கட்டப்பட்டிருக்கும் பகுதி படலம். படலை என்னும் சொல்லும் படல் < படலை < > படலம் எனப் பின்னிய விரிவைக் காட்டுவன.

அடிக்குறிப்பு

  1. 'ஒரு பொருள் நுதலிய சூத்திரத்தானும்,
    இன மொழி கிளந்த ஓத்தினானும்,
    பொது மொழி கிளந்த படலத்தானும்,
    மூன்று உறுப்பு அடக்கிய பிண்டத்தானும், என்று
    ஆங்கு அனை மரபின் இயலும்' என்ப (தொல்காப்பியம் 3-470)
  2. ஒரு நெறி இன்றி விரவிய பொருளான்
    பொது மொழி தொடரின் அது படலம் ஆகும் (தொல்காப்பியம் 473)
  3. சுந்தர காண்டத்தின் உள்ளே வரும் படலங்களில் ஒன்று கடல்தாவு படலம்
  4. wig
  5. வேடு கட்டும் துணி
  6. இலங்கு மணி மிடைந்த பசும் பொன் படலத்து
    அவிர் இழை தைஇ, மின் உமிழ்பு இலங்கச்
    சீர் மிகு முத்தம் தைஇய
    நார்முடிச் சேரல்! (பதிற்றுப்பத்து 39)
  7. குடல் - குடர். பந்தல் -பந்தர் என்றெல்லாம் வருவது போன்றது
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya