படிமங்களின் நம்பிக்கைத் துரோகம் (ஓவியம்)

"இது ஒரு சுங்கான் அல்ல." படிமங்களின் நம்பிக்கைத் துரோகம் (La trahison des images) (19281929)

படிமங்களின் நம்பிக்கைத் துரோகம் என்பது, அடிமன வெளிப்பாட்டுவாத (Surrealist) ஓவியரான ரேனே மார்கிரிட் (René Magritte) என்பவரால் வரையப்பட்டது. இது, இவ்வோவியத்தில் எழுதப்பட்டுள்ள இது சுங்கான் அல்ல (Ceci n'est pas une pipe = this is not a pipe) என்னும் தொடருக்காகப் பெயர் பெற்றது. இது இப்பொழுது, லாஸ் ஏஞ்சலிசில் உள்ள கவுண்டி ஓவிய அருங்காட்சியகத்தில் உள்ளது.[1][2] Ceci n'est pas une pipe[2][3]

இந்த ஓவியத்தில், புகையிலைக் கடையின் விளம்பரத்தில் வருவதுபோல, ஒரு சுங்கான் வரையப்பட்டுள்ளது. இதற்குக் கீழே இது சுங்கான் அல்ல என்றும் எழுதப்பட்டுள்ளது. இது ஒரு முரண்பாடு போலத் தோன்றினாலும், இதுவே உண்மையாகும். இது சுங்கானின் ஒரு படிமம் மட்டுமே. மார்கிரிட் ஒருமுறை பின்வருமாறு கூறினார்:

இதற்குள் புகையிலையை இடுங்கள் பார்ப்போம், இது ஒரு சுங்கான் என்று இதிலே எழுதியிருப்பேனானால் நான் பொய் சொன்னவனாவேன்.

பிரான்சிய இலக்கியத் திறனாய்வாளரும், தத்துவவியலாளருமான மைக்கேல் ஃபௌகல்ட் என்பார் இவ்வோவியம் மற்றும் அதனுடைய முரண்பாட்டைப் பற்றியும் இது சுங்கான் அல்ல (1973) என்னும் நூலில் எழுதியுள்ளார்.

மேற்கோள்கள்

  1. La Trahison des images (Ceci n'est pas une pipe), Los Angeles County Museum of Art
  2. 2.0 2.1 Foucault, Michel (2008). This is Not a Pipe (PDF). James Harkness (Editor, Translator), René Magritte (Illustrator) (2nd ed.). Berkeley: University of California Press. ISBN 9780520236943.
  3. Bowman, Russell (2014). "Words and Images: A Persistent Paradox". Art Journal 45 (4): 335–343. doi:10.1080/00043249.1985.10792322. 
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya