பட்டிமன்றம் ராஜா
பட்டிமன்றம் ராஜா (Pattimandram Raja) என்று பிரபலமாக அறியப்படும் சிம்சன் ராஜா என்பவர் தமிழ்நாடு மாநிலம், மதுரையைச் சேர்ந்த ஓர் தமிழ்த் திரைப்பட நடிகர், நகைச்சுவை மற்றும் பட்டிமன்றப் பேச்சாளராவார். சன் தொலைக்காட்சியில் நாள்தோறும் காலை ஒளிபரப்பப்படும் வாங்க பேசலாம் நிகழ்ச்சியின் தொகுப்பாளராகவும் உள்ளார். சிவாஜி திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரைத்துறைக்கு அறிமுகமான இவர் மதுரை யுணைட்டட் வங்கியில் பணிபுரிந்து கொண்டிருந்தார்.[2] தமிழ் மொழி பேச்சு நிகழ்ச்சிகளில் (பட்டிமன்றம்) தனது உரைகளுக்காக பிரபலமான அறியப்பட்ட ஓர் இந்திய தொலைக்காட்சி ஆளுமை ஆவார். சாலமன் பாப்பையாவால் நடத்தப்பட்ட விவாதப் பேச்சு நிகழ்ச்சிகளில் இவர் ஆற்றிய உரைகள் அவரை உலகெங்கிலும் உள்ள தமிழ் இல்லங்களில் பிரபலமாக்கியது. வாழ்க்கைக் குறிப்பு'பட்டிமன்றம்' ராஜா' மதுரைக்கு அருகில் உள்ள கீழமாத்தூர் என்ற கிராமத்தில் பிறந்தார். இவரது பெற்றோர் கிராமத்தில் உள்ள ஒரு பள்ளியில் ஆசிரியர்களாக இருந்தனர். மதுரையில் உள்ள செயின்ட் பிரிட்டோ மேல்நிலைப் பள்ளியில் இவர் பள்ளிப் படிப்பை முடித்தார். மதுரை அமெரிக்கன் கல்லூரியில் பி.காம்., பட்டப்படிப்பை முடித்த ராஜா, மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் எம்.ஏ., (பத்திரிகை மற்றும் மக்கள் தொடர்பு) படித்தார். 1984 முதல் 2019 வரை யுனைடெட் பேங்க் ஆஃப் இந்தியாவில் பணியாற்றினார். சாலமன் பாப்பையாவுடன் பல நாடுகளுக்குப் பயணம் செய்து விவாதப் பேச்சாளராகப் பிரபலமானார். சன் தொலைக்காட்சியில் திருவிழாக் காலங்களில் ஒளிபரப்பாகும் புகழ்பெற்ற பட்டிமன்றம் நிகழ்ச்சிகளில் பல்வேறு பகுதிகளைப் பற்றிய தகவல்களை புத்திசாலித்தனமான மற்றும் நகைச்சுவையான பேச்சுகளால் இவர் புகழ் பெற்றார். வாங்க பேசலாம் போன்ற பேச்சு நிகழ்ச்சிகள் மூலம் நடப்பு விவகார தகவல்களையும் வழங்கினார்.[1] அமெரிக்கா, ஐக்கிய இராச்சியம், பிரான்சு, ஆத்திரேலியா, சப்பான், மத்திய கிழக்கு, சீசெல்சு, தென்னாப்பிரிக்கா, சிங்கப்பூர், தென்கிழக்கு ஆசியா, இலங்கை உட்பட உலகம் முழுவதும் 9,000+ நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளார். சிவாஜி (2007), குரு என் ஆளு (2009) மற்றும் இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா (2013) உட்பட சில நன்கு அறியப்பட்ட தமிழ் படங்களில் நடித்தார்.[3] நடித்த படங்கள்
மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia