பட்டிமன்றம்பட்டிமன்றம் (Pattimandram) என்பது தமிழ் மொழிக்கே உரிய சிந்தனை கலை வெளிபாட்டு வடிவங்களில் ஒன்றாகும். எதிர்மறையான இரண்டு கருத்துக்களை தேர்ந்தெடுத்து விவாதப் பொருளாக்கி, இரண்டு அணிகளாகப் பிரிந்து நகைச்சுவை சொட்டச் சொட்ட விவாதித்து முடிவில் எடுத்துக் கொண்ட இரண்டு தலைப்புகளில் எது சிறந்தது என்று தீர்ப்பளிக்கப்படும். நிகழ்வுக்கு ஒரு நடுவர் தலைமை வகிப்பார். இரு அணிகளிலும் பேச்சுத் திறன் கொண்ட தேவையான பேச்சாளர்கள் இருப்பார்கள்.[1] முரண்பாடான பலநோக்கங்ளை உடைய கருத்துக்களை விவரிக்க, விவாதிக்க, பரப்புரைக்க பட்டிமன்றங்கள் உதவுகின்றன. வன்முறையற்ற, பண்பட்ட முறையில், கருத்துக்களையும் பேச்சுத் திறனையும் முன்வைத்து, சிக்கலான பிரச்சினைகளை அலசவும் பட்டிமன்றங்கள் உதவுகின்றன. தமிழ்த் தொலைக்காட்சியில் பட்டிமன்றங்கள்புத்தாண்டு, பொங்கல், தீபாவளி, கிறித்துமசு போன்ற பண்டிகை நாட்களில் சிறப்பு நிகழ்ச்சியாக தமிழ்த் தொலைக்காட்சிகளில் பட்டிமன்ற நிகழ்வுகள் இடம் பெறுகின்றன.[2] இப்பட்டிமன்றங்கள் பண்டிகை நாட்களுக்கு சில நாட்களுக்கு முன்பு நடத்தப் பெற்று, ஒளிப்பதிவு செய்யப்பட்டு பண்டிகை நாட்களில் ஒளிபரப்பு செய்யப்படுகின்றன. கீழே குறிப்பிட்ட பட்டிமன்றப் பேச்சாளர்கள் தலைமையிலான பட்டிமன்றங்கள் தமிழ்த் தொலைக்காட்சிகளில் அதிகமாக இடம் பெறுகின்றனர்.
மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia