பணம் (திரைப்படம்)
பணம் (Panam) என்பது 1952 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். என். எஸ். கிருஷ்ணன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்திற்கு மு. கருணாநிதி திரைக்கதை உரையாடலை எழுதினார். இதில் சிவாஜி கணேசன், பத்மினி, என். எஸ். கிருஷ்ணன், டி. ஏ. மதுரம், எஸ். எஸ். ராஜேந்திரன், வி. கே. ராமசாமி, பி. ஆர். பந்துலு ஆகியோர் நடித்திருந்தனர். பல படங்களில் இணைந்து நடித்த சிவாஜி கணேசன், பத்மினி ஆகியோர் இணைந்து நடித்த முதல் திரைப்படம் இதுவாகும்.[2][3] நடிப்பு
தயாரிப்புஇப்படத்தை மதராஸ் பிக்சர்ஸ் என்ற பதாகையின் கீழ் ஏ. எல் .சீனிவாசன் தயாரித்தார். இது அவரின் முதல் தயாரிப்பு ஆகும். இப்படத்தின் பாரதிதாசனின் ஒரே ஒரு பாடலைத் தவிர அனைத்துப் பாடல்களையும் ஏ. எல். சீனிவாசனின் சகோதரர் கண்ணதாசன் எழுதினார். இப்பட்டத்தில் சிவாஜியம் பத்மினியும் இணைந்து நடித்தனர் இது அவர்கள் இணைந்து நடித்த முதல் படமாகும். அதனிபிறகு இந்த இணை 60 படங்களுக்கு மேல் இணைந்து நடித்தது. இது சிவாஜிகணேசனின் இரண்டாவது திரைப்படம். 'பராசக்தி' வெளியாகி 2 மாதங்களுக்குப் பின் இத்திரைப்படம் வெளியாகியது. பராசக்தியும், பணமும் ஒரே நேரத்தில் தயாராகி வந்தன. பராசக்தி வெளிவருவதில் கொஞ்சம் தாமதமாகியிருந்தால், சிவாஜியின் முதல் திரைப்படமாக பணம் அமைந்திருக்கும். பாடல்கள்அப்போது வளர்ந்து வரும் இசையமைப்பாளர்களாக இருந்த விஸ்வநாதன்-ராமமூர்த்தி இப்படத்திற்கு இசையமைத்தனர்.[4] அவர்கள் இணைந்து இசையமைத்த முதல் படம் இதுவாகும். இப்படத்தில் திமுக பற்றி பாடல் இருக்கவேண்டும் என்று படக்குழு விரும்பியது. ஆனால் தணிக்கைக் குழு அனுமதிக்காது என்பதால் திமுக என்று வருமாறு 'தினா முனா கானா' என்ற பாடலை கண்ணதாசன் எழுதினார். அதாவது திருக்குறள் முன்னணி கழகம் என்று பாடலில் வந்தது. அப்பாடலை என். எஸ். கிருஷ்ணன் பாடினார்.[5] பாடல் வரிகளை பாவேந்தர் பாரதிதாசன், கண்ணதாசன் ஆகியோர் எழுதினர். பாடல்களை என். எஸ். கிருஷ்ணன், டி. ஏ. மதுரம், சி. எஸ். பாண்டியன் மற்றும் பின்னணிப் பாடகர்கள் சி. எஸ். ஜெயராமன், ஜி. கே. வெங்கடேசு, எம். எல். வசந்தகுமாரி, டி. வி. ரத்தினம், ராதா ஜெயலட்சுமி ஆகியோர் பாடினர்.[6]
மேற்கோள்கள்
வெளியிணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia