பத்தூர் ஏரி
பத்தூர் ஏரி (இந்தோனேசியம்: Danau Batur; ஆங்கிலம்: Lake Batur) என்பது இந்தோனேசியா, பாலி, பாங்கிலி பிராந்தியம். கிந்தாமணியில் உள்ள ஓர் எரிமலை ஏரி ஆகும். பாலியின் உபுட் நகரிலிருந்து வடகிழக்கே சுமார் 30 கிமீ (19 மைல்) தொலைவில் அமைந்துள்ளது. இந்த ஏரி, எரிமலைச் செயல்பாட்டில் உள்ள எரிமலை வளையத்திற்குள் (Ring of Fire) அமைந்துள்ள பத்தூர் எரிமலையின் பெருவாயின் உள்ளே உள்ளது. புவியியல்பத்தூர் ஏரி என்பது செயல்நிலை எரிமலையான பத்தூர் மலையின் தென்கிழக்குப் பகுதியில், பழைய பத்தூர் எரிமலைப் பெருவாயிற்குள், அமைந்துள்ளது. அளவியல்பத்தூர் ஏரியின் ஆழமான மையம் சுமார் 88 மீட்டர்கள் ஆகும்.[2] வடிகால் பரப்புபத்தூர் ஏரியின் எரிமலைப் பெருவாய்ப் பகுதி ஒரு முக்கியமான வேளாண்மைப் பகுதியாகும். இங்கு பல்வேறு வகையான விளைபொருட்கள் பயிரிடப்படுகின்றன. பாசன நீர், ஏரியில் இருந்து குழாய்கள் மூலமாக மேலே கொண்டுவரப்பட்ட பிறகு ஏரிக்குள் மீண்டும் பாய்கிறது. பொதுவாக இந்தச் செயல்பாடு, ஏரிக்கு ஊட்டச்சத்துக்களைக் கொண்டுவருகிறது. டோயா பூங்கா கிராமத்தில், பத்தூர் எரிமலையுடன் தொடர்புடைய பல வெப்ப நீரூற்றுகள் உள்ளன. இவை சுற்றுலா நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்படுகின்றன.[3] இந்த வெப்ப நீரூற்றுகளிலிருந்து வெளிவரும் நீர் மீண்டும் பத்தூர் ஏரியில் பாய்கிறது. மீன்வளர்ப்புஅண்மைய ஆண்டுகளில், பத்தூர் ஏரி மீன் வளர்ப்புக்காகப் பயன்பட்டு வருகிறது. 2011-ஆம் ஆண்டு ஓர் ஆய்வு மேற்கொள்ளப்பட்டபோது, நைல் நதியைச் சேர்ந்த திலாப்பியா மீன்கள் (Nile tilapia), பத்தூர் ஏரியில் ஆதிக்கம் செலுத்தும் மீன் இனமாக இருந்தது.[4] இந்த மீனின் உள்ளூர்ப் பெயர் ஈக்கான் முஜாயிர் (Ikan Mujair). மேற்கோள்கள்
மேலும் காண்க |
Portal di Ensiklopedia Dunia