பத்ராவதி (கர்நாடகம்)
பத்ராவதி (Bhadravati) இந்திய மாநிலமான கர்நாடகாவின் சிமோகா மாவட்டத்தின் சிமோகா வருவாய் வட்டத்தில் உள்ள நகரமாகும். பத்ராவதி நகரம் பெங்களூரிவிலிருந்து 255 கிலோ மீட்டர் தொலைவிலும், மாவட்டத் தலைமையிடமான சிமோகா நகரத்திலிருந்து 20 கிலோ மீட்டர் தொலைவிலும் உள்ளது.[2] பத்ராவதி நகராட்சி 67.05 சதுர கிலோ மீட்டர் பரப்பளவும், 1,51,102 மக்கள் தொகையும் கொண்டது.[3] பெயர்க் காரணம்இந்நகரில் பாயும் பத்ரா ஆற்றின் பெயரால் இந்நகருக்கு பத்ராவதி எனப் பெயர் ஆயிற்று. இந்நகரத்தின் முந்தைய பெயர் பேன்கிபுரா அல்லது பேன்கி பட்டின ஆகும்.[2] ஹோய்சாளர்கள் இந்நகரத்தை தலைநகராகக் கொண்டு ஆண்டனர். மக்கள் தொகையியல்2011ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி பத்ராவதி நகரத்தின் மொத்த மக்கள் தொகை 1,51,102 ஆகும். அதில் ஆண்கள் 75,009 ஆகவும்; பெண்கள் 76,093 ஆகவும் உள்ளனர். எழுத்தறிவு 86.36% ஆகவும் உள்ளது. ஆயிரம் ஆண்களுக்கு 1014 பெண்கள் என்ற அளவில் பாலின விகிதம் உள்ளது.[4] [5] ஆறு வயதிற்குட்பட்ட குழந்தைகள், மொத்த மக்கள் தொகையில் 10% அளவில் உள்ளனர்.[6] பத்ராவதி நகரத்தின் முக்கிய மொழி கன்னட மொழி ஆகும். போக்குவரத்துசாலைதேசிய நெடுஞ்சாலை எண் 206 மற்றும் 13 பத்ராவதி நகரத்தின் வழியாக செல்கிறது. பெங்களூருவிலிருந்து சிமோகா செல்லும் பேருந்துகள் பத்ராவதி நகரத்தில் நின்று செல்கிறது. தொடருந்துசிமோகா – பெங்களூர், மைசூர் – சிமோகா, பிரூர் – சிமோகா செல்லும் அனைத்து தொடருந்துகளும், பத்ராவதி தொடருந்து நிலையத்தில் நின்று செல்கிறது.[7] பொருளாதாரம்பத்ராவதி நகரத்தில் இரும்புத் தொழிற்சாலையும், காகித தொழிற்சாலையும் உள்ளது. சுற்றுலாத் தலங்கள்
இதனையும் காண்கமேற்கோள்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia